சற்று முன்
Home / செய்திகள் / வடக்கு ஆளுநருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

வடக்கு ஆளுநருக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

இலண்டன் சென்றுள்ள வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேக்கு எதிராக பிரித்தானிய புலம்பெயர் தமிழர்களால் பாரிய எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இனப்படுகொலை அரசின் கோர முகங்களை மறைக்கப் பொது நிகழ்வுகளில் கலந்து மக்கள் மனங்களை மாற்றும் செயற்பாடுகளை செய்துவரும் வடக்கு ஆளுநர் இலங்கைக்கு திரும்ப அனுப்பப்பட வேண்டும் என்று கூறி புலம்பெயர் தமிழர்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

வை.எம்.சி.ஏ. இந்திய மாணவர் விடுதிக்கு எதிரில் நேற்றுப் பிற்பகல் 1:30 தொடக்கம் இரவு 7:00 வரை நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பெரும்திரளான புலம்பெயர் தமிழ் மக்கள் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டம் நடைபெற்று கொண்டிருக்கையில் அந்த விடுதிக்கு ஆளுநர் வருகை தந்தபோது, “இனப்படுகொலை சிங்கள் அரசின் ஆளுநரே இலங்கைக்கு திரும்பிப் போ !” என ஆளுநருக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆக்ரோசமாகக் கோஷங்களை எழுப்பினர். இதனையடுத்து பெருமளவிலான பொலிஸார் சம்பவ இடத்தில் குவிக்கப்பட்டனர்.

ஆளுநருக்கு எதிராகக் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திய செயற்பாட்டாளர் ஒருவரும் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com