வடக்கு அவையில் முடக்கிக் கிடக்கும் 14 கோடி !!

வடக்கு மாகாண சபை உருவாக்க முன்பதாக ஆளுநர் நிதியத்தில் 14 கோடியே 40 இலட்சம் ரூபா நிதிவைப்பிலிடப்பட்டிருந்தது. தாம் அதனைப்பெற்று போரினால் பாதிக்கப்பட்ட கணவனை இழந்த, அங்கவீனமான பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்போவதாக வடக்கு மாகாணசபையினர்  பெற்றுக்கொண்டனர்.  குறித்த நிதியினைப் பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அந்நிதியிலிருந்து ஒரு ரூபாவையேனும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு பயன்படுத்தாமை தெரியவந்துள்ளது. குறித்த நிதி தற்போது வடக்கு மாகாணபிரதம செயலரின் கணக்கில் வைக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வின்போதே குறித்த விடயம் வெளிக்கொணரப்பட்டுள்ளது. வடக்கு மாகாணசபை கடந்துவந்த மூன்று வருடங்கள் 09 மாதங்களில் என்ன செய்தது? என மீளாய்வு செய்யும் அமர்வு இன்று நடைபெற்றது. இதன்போது குறித்தநிதி தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டபோதே இவ்விடையங்களை அவைத்தலைவர் வெளிப்படுத்தியுள்ளார்.

தனது பெரு முயற்சியினாலேயே ஆளுநர் நிதியத்திலிருந்து குறித்த நிதி மாகாணசபைக்கு மாற்றப்பட்டதாக பெருமைப்பட்டுக்கொண்ட அவைத்தலைவர் குறித்த நிதி ஏன் பயன்படுத்தப்பட்டிருக்கவில்லை என்பதற்கு விளக்கமளித்திருக்கவில்லை. எனினும் புதிதாக மகளிர் விவகாரத்திற்கு தனியான அமைச்சு உருவாக்கப்பட்டுள்ள நிலையில் அவ் அமைச்சராக பெறுப்பேற்றுள்ள அனந்தி சசிதரன் நிதியினைப் பெறுப்பேற்று போரினால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்வாதார உதவித்திட்டங்களுக்கு இதனைப் பயன்படுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com