வடக்கு அபிவிருத்திக்கு 10 ஆயி­ரத்து 310 மில்­லி­யன் ரூபா தேவை!

அடுத்த ஆண்டு அபி­வி­ருத்­தி­களை முன்­னெ­டுப்­ப­தற்கு வட மாகாணத் துக்கு 10 ஆயி­ரத்து 310 மில்­லி­யன் ரூபா தேவை என்­றும், அந்த நிதியை வழங்­கு­மா­றும் கொழும்பு அர­சிடம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.

கொழும்பு அர­சின் நிதி அமைச்­சால் எதிர்­வ­ரும் நவம்­பர் மாதம் 9ஆம் திகதி வரவு செல­வுத் திட்­டம் சமர்ப்பிக்­கப்­ப­ட­வுள்­ளது. அதற்கு முன்­ன­தாக ஒவ்­வொரு மாகாண சபை­க­ளும் அடுத்த ஆண்­டுக்கு எவ்­வ­ளவு நிதி தேவை என்ற கோரிக்­கையை கொழும்பு அர­சுக்கு முன்­வைக்க வேண்­டும்.

அத­ன­டிப்­ப­டை­யில் வடக்கு மாகாண சபை 10 ஆயி­ரத்து 310 மில்­லி­யன் ரூபாவை கோரிக்­கை­யாக முன்­வைத்­துள்­ளது. கடந்த ஆண்டு 10 ஆயி­ரத்து 200 மில்­லி­யன் ரூபாவை வடக்கு அரசு கோரிக்­கை­யாக விடுத்­தி­ருந்­தது.

இந்த ஆண்டு அதில் 110 மில்­லி­யன் ரூபாவை மாத்­தி­ரம் அதி­க­மா­கக் கோரி­யுள்­ளது. வடக்கு மாகாண முத­ல­மைச்­ச­ரின் அமைச்­சின் கீழான திணைக்­க­ளங்­க­ளுக்கு ஆயி­ரத்து 493 மில்­லி­யன் ரூபா­வும், விவ­சாய அமைச்­சுக்கு ஆயி­ரத்து 783 மில்­லி­யன் ரூபா­வும், கல்வி அமைச்­சுக்கு 3 ஆயி­ரத்து 364 மில்­லி­யன் ரூபா­வும், சுகா­தார அமைச்­சுக்கு 2 ஆயி­ரத்து 149 மில்­லி­யன் ரூபா­வும், மீன்­பிடி மற்­றும் போக்­கு­வ­ரத்து அமைச்­சுக்கு ஆயி­ரத்து 520 மில்­லி­யன் ரூபா­வும் தேவை என்று கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளது.

இதே­வேளை, வடக்கு அர­சால் 2016ஆம் ஆண்டு, ஊழி­யர்­க­ளின் சம்­ப­ளம் மற்­றும் அபி­வி­ருத்­திக்கா 32 ஆயி­ரத்து 200 மில்­லி­யன் ரூபா தேவை என்று கொழும்பு அர­சி­டம் கோரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருந்­தது.

கொழும்பு அர­சால் 22 ஆயி­ரத்து 94.851 மில்­லி­யன் ரூபா நிதியே ஒதுக்­கப்­பட்­டி­ருந்­தது. வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளி­டம் எந்­த­வொரு முன்­மொ­ழி­வும் பெற்­றுக் கொள்­ளப்­ப­டா­ம­லேயே, கொழும்பு அர­சி­டம் அடுத்த ஆண்டு வரவு செல­வுத் திட்­ட­துக்­கான கோரிக்கை முன்­வைக்­கப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com