சற்று முன்
Home / அரசியல் கட்டுரைகள் / வடக்குச் செயலணி – காலங் கடத்தும் நாடகமா ?

வடக்குச் செயலணி – காலங் கடத்தும் நாடகமா ?

ந.லோகதயாளன்.

இரு முறைகள் கூடிக் கலைந்துவிட்ட வடக்கு கிழக்கு அபிவிருத்திச் செயலணியில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டாலே கூடிய கூட்டத்திற்கான பலன் கிட்டும் அல்லது காலத்தை கடத்துமர புதிய உத்தியாகவே கருதப்பட்டு விடும் எனக் கவலை தெரிவிக்கப்படுகின்றது.,

வடக்கு கிழக்கு  மாகாண அபிவிருத்திச் செயலணி 2018-08-27 , 2018-10-03 ஆகிய இரு தினங்களில் கூடிக் கலைந்த நிலையில் பல விவகாரங்களை தோற்றுவித்துள்ளது. குறிப்பாக அமைச்சர்களின் குழப்பங்கள் பகுரங்கவெளியில் பிரஸ்தாபிப்பு ஒற்றுமையாக இருந்தவர்கள் முரண்பாடு  , ஒரு கட்சி உட்பூசல் , மாகாண சபைக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்குமான மனக் கசப்புக்களை படம்போட்டுக்காட்டுவதாகவே  குறித்த செயலணி அமைந்தன.

எதிர்க்கட்சித் தலைவர் ஜனாதிபதிமீது பட்டம்.

இச் செயலணியின் இரு நாள் ஆரம்பத்திலும்   தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதியிடம் தனது கோரிக்கைகளை உரையாகத் தெரிவித்தார். இதன்போது  2018-10.03  அன்று கடந்த   செயலணியில் என்னால் பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டன. அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக பதிலளிக்கப்பட்டது. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபுலவு உள்ளிட்ட நிலங்களை விடுவிக்குமாறு கோரி மக்கள் மேற்கொள்ளும் போராட்ட நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு விடுவிக்கப்படும் என ஜனாதிபதி கூறியதை நான் அந்த மக்களிடம் பல தடவை  கூறினேன். இருப்பினும் இன்றுவரை விடுவிக்கப்படவில்லை. அவ்வாறானால் எம்மையும் எமது மக்களையும் பிரிக்கும் முயற்சியா எனப் பகிரங்கமாகவே கோரினார்..

அதேபோன்று வடக்கின் ஏனைய மாவட்டங்களில் உள்ள நிலங்கள் குறிப்பாக பாடசாலைகள் மற்றும் பண்ணைகள் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் கடந்த கூட்டத்தின் பின்னர் எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை. மாறாக திணைக்களங்களின் பெயரில் நில அபகரிப்புத் தொடர்வதே பதிவு செய்யப்படுகின்றது. அதேநேரம் மீள் குடியேறிய மக்களின் அபிவிருத்திக்கு போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால் அவை நகராமலேயே இருக்கின்றது. இவை தொடர்பில் என்ன நடவடிக்கை. கூறப்பட்ட விடயங்களிற்கு மறு கூட்டத்திற்கு இடையில் தீர்வு வேண்டும்.  என்றார்.

அமைச்சர்களின் முரண்பாட்டால் எமது மக்களிற்கான வீட்டுத் திட்டம் பாதிக்கப்படக்கூடாது.

இதேநேரம் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் வீட்டுத் திட்டம் வரும் என நம்பி எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆனால் அமைச்சர்களான சுவாமிநாதன் மற்றும் மனோகணேசனில் அத் திட்டத்தை யார் நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் அமைச்சர்களிற்கு இடையில் பிணக்கு நிலவுகின்றது. எந்த அமைச்சர் அதனை செய்வது என்பது எமது பிரச்சணை அல்ல. அதனை அமைச்சரவையில் தீர்த்துக்கொள்ளுங்கள் ஆனால் எமது மக்களிற்கு உடனடியாக வீடு வேண்டும். என்பதே எமது பிரச்சணை.


நில ஆக்கிரமிப்பு இடம்பெறும் நிலையில் தமிழர்களிற்கு வழங்கிய நிலத்தை மகாவலி என்னும் பெயரில் பெரும்பான்மை இன மக்களிற்கு வழங்கியதாக நாம் கடந்த கூட்டத்திலேயே கூறியபோது அதன் அதிகார சபை ஜனாதிபதியிடமே அவ்வாறு வழங்கவில்லை. என மறுத்துரைத்தனர். ஆனால் அவர்களால் வழங்கிய அனுமதிப்பத்திரம் கைவசம் உள்ளதாக கான்பித்து இவற்றிற்கு ஜனாதிபதி தீர்வை முன்வைக்க வேண்டும். என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தபோது அமைச்சர் மனோகணேசன் தன்மீது சுமந்திரன் குறைகூறுவதாகவும் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக எவ்வளவோ நிதி ஒதுக்கியும் உங்கள் மாகாண சபை போட்டியால் அவை இடம்பெறவில்லை. அவை எனது தவறு அல்ல எனத் தெரிவித்த சில நிமிடங்களில் வீட்டுத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி முன்னிலையில்  அமைச்சர்களான சுவாமிநாதன் மனோ கணேசன் இடையே கடும் வாய்த்தர்க்கம் நிலவியதனை நாடாளுமன்ற உறுப்பினர் உடனடியாக உதாரணப் படுத்தினார் அதாவது இந்த முரண்பாட்டையே சற்று முன்னர் நான் கூறியபோது அமைச்சர் மனோ கணேசன் தவறாக புரிந்து பதிலளித்தார். இருப்பினும் அது உண்மை என நிரூபித்தார் எனக் கூற சபையே சிரிப்பொலியில் நகைத்தபோது மனோ கணேசனின் முகம் சிவந்தது.

யாழ்ப்பாணம் மாவட்டத்திற்கு ஒதுக்கிய நிதிகள் கிடைக்கவில்லை என மாவட்டச் செயலாளர் சுட்டிக்காட்டினார்.

யாழ்ப்பாண மாவட்டத்திலே கடந்த ஆண்டு மீள் குடியேற்ற அமைச்சு மற்றும் தேசிய நல்லிணக்க அமைச்சிற்காக குறிப்பிட்டளவு நிதி ஒதுக்கீடு செய்தபோதும் இந்த ஆண்டு மிகச் சொற்ப நிதியே ஒதுக்கியமையினால் மீளக் குடியேறும் மக்களிற்கும் அண்மையில் விடுவிக்கப்பட்ட பகுதிகளின் புனரமைப்பிற்கும் நிதி இல்லை. இதேநேரம் தேசிய நல்லிணக்க அமைச்சின் கடந்த ஆண்டு ஒதுக்கீட்டின் 152 மில்லியன் ரூபாவும் மீள் குடியேற்ற அமைச்சின் 57 மில்லியன் ரூபாவும் வருமதியாகவுள்ள நிலையில் அப் பணத்தை வழங்குவதன் மூலமே முன்னெடுத்த திட்டங்களை நிறைவு செய்ய முடியும் என யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி  தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் கடும் கண்டனத்தை தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிக பாடசாலைகள் அமைப்பதற்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதன் பணிகள் இடம்பெறவில்லை. அதேபோன்று கிளிநொச்சி மாவட்டம் விவசாய மாவட்டம் ஆனால் விவசாயப் பண்ணைகள் படை வசமும் சிவில் பாதுகாப்பு படைகளிடமும் உள்ளதனால் மாவட்டத்தின் அபிவிருத்தியும் வேலை இல்லாப் பிரச்சணையும் நிலவும் நிலையில் அவற்றின் நிலை என்ன .
குறிப்பாக மாவட்டத்தில் 9 பாடசாலைகளின் அபிவிருத்திக்காக 215 மில்லியன் ரூபா அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்கான அனுமதிக் கடிதமும் அத்திட்டத்தை முன்னெடுக்குமாறும் கடிதம் அனுப்பப்பட்ட நிலையில் அதனை நடைமுறைப்படுத்த விடாது மாகாண கல்வி அமைச்சு தடையாகவுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக மாகாண சபை அதிகாரத்தின் கீழ் கல்வி மாகாணத்திற்கு பகிரப்பட்ட நிலையில் கல்விக்காக ஆயிரம் மில்லியனை போருகின்றோம். இருப்பினும் 200 மில்லியன் ஒதுக்கப்படுகின்றது. ஆனால் மத்தி நேரடியாகத் திட்டத்தை அனுமதித்துவிட்டு அதற்கான செலவு மதிப்பீடுகளை மட்டும் எம்மிடம் போருகின்றனர். அந்த நிதியை எம்மிடம் அனுமதித்தால் நாமே தேவையான இடத்திற்கு திட்டத்தை முன்னெடுப்போம் என வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ.பத்திநாதன் உரையாற்றியதனால் இருவருக்கும் இடையில் ஒரு பனிப்போரே மூண்டது.

இதேநேரம் மூடிக் கிடக்கும் காங்கேசன்துறை சீமேந்து ஆலையை மீள திறக்கும் வகையில் சுன்னக்கல்லை அங்கே அகழாது சீமேந்து துகளாக எடுத்துவந்து அதனை அரைத்து பொதி செய்து சந்தைப்படுத்துவதன் மூலம் அங்கே பலருக்கு வேலை வாய்ப்பை வழங்க முடியும். என நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கூற உடனடியாகவே நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவான் குறித்த திட்டத்திற்கு தனது கடும் எதிர்ப்பை வெளியிட்டார். அதாவது அப் பகுதி தற்போது மக்கள் அதிகம் வாழும் பிரதேசம் இனி அங்கே சீமேந்து ஆலை உருவாக்க முயற்சிக்க கூடாது. ஆனால் அப் பகுதியை ஓர் தொரிற் முயற்சி மையமாக மாற்றி அப் பகுதி இளைஞர்களிற்கு  வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும். எனக் கோரிக்கை விடுத்த சமயம் அப் பிரதேசத்தை எவ்வாறு அபிவிருத்தி செய்து அங்கே வேலை வாய்ப்பை வழங்க என்ன வழிமுறை என 2010ம் ஆண்டில் இருந்தே திட்டத்தை கூட்டமைப்பு சமர்ப்பித்துள்ளது.
அவ்வாறு சமர்ப்பித்த திட்டம் 2015ம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்டும் உள்ளது. அதனால் ஏற்றுக்பொள்ளப்பட்ட திட்டத்தினை நடைமுறைப்படுத்துங்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்தார்.

இவை அனைத்திற்கும் ஜனாதிபதி பதிலளித்தார்.

மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் முல்லைத்தீவில் தமிழர்களிற்கு முன்பு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்ட நிலமும் தற்போது அனுமதிப் பத்திரம் வழங்கவில்லை என்றபோதும் குறித்த ஆவணம் மூலம் வழங்கியமை உறுதியாகின்றது. எனவே மாவட்ட அரச அதிபர் பிரதேச செயலாளர் குறித்த அதிகார சபை மற்றும் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் மாவட்ச் செயலாளர் தலமையில் கூடு உடனடியாக இதுதொடர்பில் எனக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
.இதேநேரம் வடக்கு கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்துப் பாடசாலைகள் மற்னும் பாடசாலைகளிற்கு உரித்தான நிலங்களில் இருந்து படையினர் அகழ வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. அது நடைமுறைப்படுத்தப்படும்.

இதேநேரம் வடக்கில் படையினர் சார்பில் நடாத்தப்படும் அரச பண்ணைகள் தொடர்பில் மாகாண ஆளுநர் தலமையில் மாவட்டச் செயலாளர் மக்கள் பிரதிநிதிகள் உடன் கூடி ஆராய்ந்து அதன் சிபார்சு அறிக்கையை சமர்ப்பிக்கவும். இதேபோன்று ஏனைய மக்களிற்குச் சொந்தமான நிலம் மக்களிற்கே உரித்து என்பதால் நடவடிக்கை எடுக்கப்படும். என்றார்.

இவ்வாறு வடக்கு மாகாண நிலமைகளை அடுத்து கிழக்கு மாகாணம் தொடர்பில் கருசணை திரும்பியது.

இதில் மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை குளம் அமைந்துள்ள இடத்தில் இருந்து 90 கிலோ மீற்றர் வரை நீர் குடிநீராகச் செல்லும்போதும் அக்குளம் அமைந்துள்ள பகுதியை அண்டிய கிராமங்களிற்கு குடிநீர் இல்லை. அது தொடர்பில் பல முறை அமைச்சர் ரவூவ் ஹக்கீமின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதும். இதுவரை தீர்வு கிடைக்கவில்லை. அதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தில் போருக்கு முன்னர் இயங்கிய 5 பாரிய தொழிற்சாலைகள் போர் முடிவுற்று 10 ஆண்டு காலம் ஆகின்றபோதும் இதுவரை மீளத் திறக்கப்படவில்லை. இதனால் மாவட்ட இளகஞர்கள் வேலை வாய்ப்பு இன்றி நெருக்கடியில் உள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட விமானப்படை முகாம் அபிவிருத்திக்காக 1985ம் ஆண்டு 200 ஏக்கர் நிலம் தமிழ் தக்களின் உறுதிக்காணிகளை சுவீகரித்தனர். அதற்குப் பதிலாக 1988ம் ஆண்டு அரச காணிகள் வழங்கப்பட்டு அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டபோதும் இன்றுவரை அந்த காணிகளிற்கு உறுதி வழங்கப்படவில்லை. எனவும் சுட்டிக்காட்டினர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com