சற்று முன்
Home / செய்திகள் / வடக்குக்கு வெளியே சோதனைக் கெடுபிடி இல்லையே – கஜேந்திரன் கேள்வி – சுமந்திரன் சீற்றம்

வடக்குக்கு வெளியே சோதனைக் கெடுபிடி இல்லையே – கஜேந்திரன் கேள்வி – சுமந்திரன் சீற்றம்

இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்புத் தாக்குதல்களையடுத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதாகக் கூறி சிறிலங்கா இராணுவம் மேற்கொண்டுவரும் சோதனை நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகக் குறிப்பிட்டிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் வடக்கிற்கு வெளியே வீதிச் சேதனைகள் எதுவும் இல்லை எனவும் இதனை தான் தனது பயணத்தின் போதே நேரில் கண்டுகொண்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

எனினும் இது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு இவ்வாறான முட்டாள்தானமாக கேள்விகளைக் கேட்கவேண்டாம் என சுமந்திரன் கடும் கோபமடைந்தார்.

கடந்த மாதம் 21 ஆம் திகதி ஈஸ்ரர் திருநாளின் போது இஸ்லாமியப் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மட்டக்களப்பு மக்களின் உறவினர்ளையும் காயமமைந்தவர்களையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து அவர்களுக்கான ஆறுதல்களையும் நேரடி மனிதாபிமான உதவிகளையும் மேற்கொண்டுவந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மட்டக்களப்பிலிருந்து யாழ்ப்பாணம் திரும்புவதற்குள் நடைபெற்ற பாதுகாப்புச் சோதனைகள் பற்றியும் அவை வடக்குக்கு வெளியே கிழக்கிலே அல்லது அனுராதபுரத்திலோ பொலநறுவையிலே கூட மேற்கொள்ளப்பட்டிருக்கவில்லை என்ற உண்மை நிலைமைகளையும் பதிவு செய்துள்ளார்,

இது தொடர்பில் அவர் வெளியிட்ட பதிவில்,

ஐ.எஸ்.ஐ.எஸ் அச்சுறுத்தலுக்காக பொலநறுவையிலும் சோதனை கெடுபிடியில்லை அனுரதபுரத்திலும் இல்லை.

நேற்றிரவு மட்டக்களப்பிலிருந்து யாழ்செல்லும் கடைசிப் பேருந்து இரவு 9.00 மணிக்குப் புறப்பட்டது. அதில் 15 பேர் அமர்ந்திருந்தனர். ஒரு பெண் ஏனையோர் ஆண்கள்.
மட்டக்களப்பு நகரிலிருந்து புறப்பட்ட பேருந்து கனகராயன்குளம் வரும்வரை எந்த சோதனைக் கெடுபிடியுமில்லை.

புளியங்குளத்திற்கும் கனகராயன்குளத்திற்குமிடையில் சோதனைச் சாவடி ஒன்றில் அதிகாலை சுமார் 1.30 மணியளவில் பேருந்து நிறுத்தப்பட்டது.

இராணுவச் சிப்பாய் ஏறி அனைவரதும் அடையாள அட்டையை சோதித்தார். நித்திரையிலிருந்தவர்களை அதட்டி எழுப்பி அ.அட்டையை சோதித்தார்.
பின்னர் பேருந்து தொடர்ந்து பயணிக்க அனுமதிக்கப்பட்டது.

மாங்குளம் பொலிஸ் நீலையத்திற்கு முன்னாலுள்ள சோதனைச் சாவடியில் அதிகாலை 2.00மணியளவில் பேருந்து மீண்டும் நிறுத்தப்பட்டது. அனைத்துப் பயணிகளும் தமது அனைத்துப் பொதிகளுடனும் இறங்கி நடந்து செல்லுமாறு கட்டளையிடப்பட்டனர். அனைவரரும் பொதிகளைகாவிக்கொண்டு சென்றனர்.
சோதனைக்கெடுபிடிகளின் பின்னர் மீண்டும் பேருந்தில் ஏறியதும் அது யாழ் நோக்கி ஏ9 வீதி வழியே பயணத்தைத் தொடர்ந்தது.

ஆனையிறவில் உள்ள இராணுவ சோதனைக் கெடுபிடிச் சாவடியில் மீண்டும் பேருந்து நிறுத்தப்பட்டது.
இராணுவச் சிப்பாய் பேருந்தில் ஏறி அனைவரதும் அடையாள அட்டைகளையும் சோதனையிட்டார். அதன் பின்னர் பேருந்து பயணத்தை ஆரம்பீத்தது. சுமார் 3.30 மணிக்கு யாழ் பேருந்து நிலையத்தை அடைந்தது அப் பேருந்து.
அப்பேருந்தின் பயணிகளில் நானும் ஒருவன்.

இதேவேளை நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் ஐ.எஸ்ஐ.எஸ் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறிக்கொண்டு வடக்கில் மட்டுமே வீதித் தடைகளும் சேதனைகளும் நடைபெறுகிறது வடக்குக்கு வெளியே எதுவும் இல்லையே என தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

எனினும் ஊடகவியலாளரின் கேள்வியால் கோபமடைந்த சுமந்திரன் இவ்வாறான முட்டாள்தனமான கேள்விகளைக் கேட்கவேண்டாம் என சினப்பட்டுக்கொண்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com