வடக்குக்கு – கிழக்கில் வீடில்லாதவர்களுக்கு 50,000 ஆயிரம் கல் வீடுகள்

வடக்குக்கு – கிழக்கில் வீடில்லாதவர்களுக்கு 50,000 ஆயிரம் கல் வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் இந்த வீடுகள் அனைத்தும் ஒப்பந்த நிறுவனங்களூடாகவே அமைத்துக்கொடுக்கப்படும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

வடக்கில் ஏற்கனவே 60,000ஆயிரம் பொருத்து வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டிருந்தபோதிலும், அத்திட்டத்திற்கு வடக்கு அரசியல் வாதிகளும் மக்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அத்துடன் பொருத்து வீடுகள் வடக்குக் கிழக்கு காலநிலைக்கு பொருத்தமற்றது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 50,000 ஆயிரம் கல்வீடுகளைக் கட்டுவதற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்தது. எனினும் இதற்குரிய பணத்தினை ஒப்பந்த காரரர்களே செலுத்தவேண்டுமெனவும், ஒப்பந்த காரரர்களுக்கு நீண்ட கால கடன்அடிப்படையில் அத்தொகையை அரசாங்கம் செலுத்தும் எனவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதற்குரிய கேள்விமனுக் கோரல் அடுத்த வாரம் விளம்பரப்படுத்தப்படும் எனவும், அதற்கான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இத்திட்டத்தை, அரசாங்கத்தின் கீழ் இயங்கும் தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சு முன்னெடுக்கும் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com