சற்று முன்
Home / செய்திகள் / வடக்கில் 7 பாடசாலைகளுக்கு வந்த நிதி திரும்பிப் போனது !

வடக்கில் 7 பாடசாலைகளுக்கு வந்த நிதி திரும்பிப் போனது !

வடக்கு மாகாண கல்வி அமைச்சு செலவு மதிப்பீடு தயாரித்து வழங்க மறுத்தமையினால் வடக்கு மாகாணத்திற்கு வந்ந 7 பாடசாலைகளிற்கான நிதி நேற்றைய தினம் மாற்றப்பட்டபோதும் தேசிய பாடசாலைகளிற்கான நிதி முழுமையாக விடுவிக்கப்பட்டது.

தேசிய நல்லிணக்க அரச கரும்மொழிகள் ஒருமைப்பாடு அமைச்சினால் வடக்கில் முன்னெடுக்கப்படும் வேலைத் திட்டம் தொடர்பான முன்னேற்ற ஆய்வு. இந்த ஆண்டு ஒதுக்கீட்டுப் பணி நிறைவுறுமா அல்லது மாற்றவேண்டுமா என்பது தொடர்பிலும் குறித்த அமைச்சின் 2019ற்கான முன்மொழிகள் தொடர்பாகவும் யாழ். மாவடடச் செயலகத்தில் இடம்பெற்றபோதே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டது.

வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரிக்கான ஒரு மில்லியன் , இளவாலை கென்றி வித்தியாலயத்தின் 25 மில்லியன்.
உரும்பிராய் றோ.க.வித்தியாலயத்திற்கு ஒதுக்கப்பட்ட 12 மில்லியன் கிளிநொச்சி இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தின் 35 மில்லியன் ஆகியவற்றுடன் முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்திற்கான 14.5 மில்லியன் , வள்ளிபுனம் பாடசாலையின் 10 மில்லியன் என்பனவே வேறு திட்டங களிற்கு திருப்பப்பட்டன.

இருப்பினும் 2019ம் ஆண்டின் ஆரம்பத்தில் இவற்றின் செலவு மதிப்பீட்டை தந்தால் உடன் அனுமதிப்பதாக அமைச்சர் உத்தரவாதம் வழங்கினார்.

About Jaseek

One comment

  1. Great service to Tamil World!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com