சற்று முன்
Home / செய்திகள் / வடக்கில் 43 பேருக்குத் தொற்று

வடக்கில் 43 பேருக்குத் தொற்று

யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடம் ஆகியவற்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் வடக்கு மாகாணத்தினைச் சேர்ந்த 43 தொற்றாளர்களும் திருகோணமலை மாவட்டத்தினைச் சேர்ந்த 07தொற்றாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில்,

சாவகச்சேரி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 18 பேரும் வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஐந்து பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
யாழ்.போதனா ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில்,

திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஐந்து பேர்,

பருத்தித்துறை வைத்தியசாலையைச் சேர்ந்த ஒருவர்,

தெல்லிப்பளை வைத்தியசாலையைச் சேர்ந்த இருவர்,

கோப்பாய் வைத்தியாசாலையைச் சேர்ந்த இருவர்,

அச்சுவேலி வைத்தியசாலையைச் சேர்ந்த இருவர்,

யாழ்.போதனா வைத்தியசாலையைச் சேர்ந்த நால்வர்,

வவுனியா பொது வைத்தியசாலையைச் சேர்ந்த நால்வர்,

தர்மபுரம் வைத்தியசாலையைச் சேர்ந்த ஒருவர்,

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையைச் சேர்ந்த மூவர்,

யாழ்.பல்கலைக்கழகத்தினைச் சேர்ந்த ஒருவர் (விரிவுரையாளர்)

தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனைவிடவும் கிளிநொச்சி கொரோனா தடுப்பு வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த 03 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com