சற்று முன்
Home / செய்திகள் / வடக்கில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள் – மக்கள் பரிதவிப்பு

வடக்கில் கடும் மழை – வெள்ளத்தில் மூழ்கின கிராமங்கள் – மக்கள் பரிதவிப்பு

கிளிநொச்சி

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் கடந்த இரு நாட்களாக நீடித்துவரும் அடைமழையில் கிளிநொச்சி மாவட்டத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதோடு, போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சியில் வழமைக்கு மாறாக 225 தொடக்கம் 370 மில்லி மீற்றர் வரை மழை பெய்துள்ளது. இதனால் பல இடங்களிலும் அதிக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அத்தோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து குளங்களும் வான் பாய்கின்றமையினால் வீதி போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு மக்கள் பெரும் சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.

சில கிராமங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு தொடர்புகள் துண்டிக்கப்பட்ட நிலையில், இராணுவத்தினர் படகுகள் மூலம் மீட்கும் பணியில் ஈடுப்பட்டனர்.

இரணைமடு குளத்தின் நீர் மட்டம் 38 அடியாக உயர்ந்துள்ளதோடு அனைத்து வான் கதவுகளும் முழுமையாக திறக்கப்பட்டுள்ளன. அத்தோடு மூன்றடிக்கு வானும் பாய்கிறது. இரணைமடுக் குளத்தின் நீர் கொள்ளளவு உயரம் 36 அடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முல்லைத்தீவு மற்றும் வடமராட்சி கிழக்கு பகுதிகளிலும் மழை வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதாக அங்கிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவித்தன. மாங்குளம் கற்குவாறி பிரதான வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளது மக்கள் உள்ளே சிக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மழை வெள்ளத்தினையடுத்து மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு நகர்த்தப்பட்டுவருகின்றனர்.

பரந்தன் முல்லைத்தீவு( A35) வீதியை பயன்படுத்துவோர் கவனத்துக்கு

இரு சக்கர வாகனங்களில் மற்றும் ஆட்டோ, குறித்த வீதியில் பயணிப்பதை தவிர்ப்பதன் மூலம் சிரமத்தை குறைக்க முடியும் . தேவிபுரம் ,வல்லிபுனம் ,விசுவமடு ஆகிய இடங்களில் போக்குவரத்தில் தடங்கல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய கிளிநொச்சி

பரந்தன் முல்லைத்தீவு வீதி

புதுக்குடியிருப்பு

வடமராட்சி கிழக்கு

தர்மபுரம்

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com