வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றுங்கள் – சுரேஷ் கோரிக்கை.

வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றாது விட்டால் வடக்கின் கல்வி, பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பாதிக்கப்படும். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.கட்டைபிராயில் உள்ள அவரது வீட்டில் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் , 
முழங்காவில் மகா வித்தியாலயலயம் என்பது தற்போது தேசிய பாடசாலையாக தரம் உயர்த்தப்பட்டிருக்கின்றது. அதற்கு அருகிலேயே சிறுவர் பாடசாலையும் இருக்கின்றது. இதன் அருகில் உள்ள பத்து ஏக்கர் காணியை இரானுவம் பிடித்து வைத்திருக்கின்றது.
 இந்தக் காணியை முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் பாவித்தார்கள் என்ற காரணத்தைக் காட்டியே இரானுவம் வைத்திருக்கின்ற போதும் அந்தக் காணியானது தனிநபருக்குச் சொந்தமான காணியாகும்.
அந்தக் காணிக்குள் தற்போது இரானுவம் விவசாயம் செய்கின்றது. இந் நிலையில் இந்த மகாவித்தியாலயத்தில் ஆண்,பெண் ஆசிரியர்களுக்காக தங்குமிட விடுதிகள் இரண்டு இருக்கின்றது. இந்த விடுதியில் யாழிலிருந்து செல்கின்ற ஆசிரியர்கள் தங்கியிருந்து படிப்பிக்கின்றனர். 
இந் நிலையில் கடந்த மூன்று தினங்களிற்கு அந்த வேலியைப் பிரித்துக் கொண்டு இரானுவத்தினர் உள்நுழைந்து ஆசிரியர்கள் தங்கியிருக்கின்ற கதவைத் தட்டியுள்ளனர். இதன் போது அங்கிருந்த ஆசிரியர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர். 
இதன் பின்னர்  அயலவர்கள் வந்ததையடுத்து இரானுவத்தினர் தப்பிச் சென்றுள்ளனர். இதனையடுத்து அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான இரானுவ அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டு அவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து சென்றனர். 
இதன் போது குறித்த வேலியை அடைத்துத் தருவதாகவும் குறித்த இரானுவத்தினரை இடமாற்றம் செய்வதாகவும் கூறியுள்ளனர்.
இவ்வாறு இராணுவம் சொல்லிவிட்டுச் சென்றிருக்கின்ற போதும் அந்த வேலி இன்று வரை அடைக்கப்படவில்லை. இரானுவத்தினரும் மாற்றப்பட்டனரோ தெரியாது. இவ்வாறு தான் நிலைமைகள் இருக்கின்றன. 
இந்தப் பாடசாலைக்கு மேலதிகமாக காணிகள் தேவை. அதே நேரம் இந்தக் காணியானது பொது மக்களுக்குச் சொந்தமான காணியாக இருக்கின்றது. 
ஆகவே இரானுவம் தொடர்ச்சியாக இங்கிருப்பதன் காரணமாக பாடசாலையில் ஆசிரியர்கள் படிப்பதற்குப் பிரச்சனை, ஆசிரியர்கள் தங்கியிருப்பது பிரச்சனை, ஆசிரியர்களுடைய பாதுகாப்புக்கு அச்சுறத்தலான நிலை இவை எல்லாமே வந்திருக்கின்றது.
இதனாலேயே நாம் தொடர்ச்சியாக சொல்கின்றோம் இவ்வாறஙான பிரதேசஙகளில் இரானுவம் தேவையில்லை. மேலதிகமாக இருக்கின்ற இரானுவத்தை மீள எடுங்கள். 
இரானுவம் எங்கு இருக்கலாம் என்றால் தேசிய பாதுகாப்பு என்று கருதினால் அவ்வாறான பாதுகாப்பிற்கு குந்தகம் என்று அறிகின்ற இடங்கள் எங்கெங்கோ அங்கெல்லாம் இரானுவத்தை வைத்திருங்கள். இதனை விடுத்து பாடசாலைக்கு நடுவிலும் பொது மக்களின் வீடுகளுக்கு அருகிலும் பொது மக்களின் விவசாய நிலங்களிலும் இரானுவம் இருப்பதென்பது நிச்சமாக தமிழ் மக்களுக்குப் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும். 
இரானுவ ஆக்கிரமிப்பு என்பது குறைக்கப்பட வேண்டுமெ தவிர அதிகரிக்கப்பட முடியாது. இதே போன்று பிரச்சனைகள் முல்லைத்தீவின் கேப்பாப்புலவிலும் நடைபெற்றது. 
அங்கும்  இரானுவம் வீட்டிற்குள் புகுந்திருக்கின்றது. அது மட்டுமல்லாமல் இன்னும் பல இடங்களில் பல சம்பவங்கள் நடைபெற்றிருக்கின்றன. ஆனால் இன்னமும் கூட அரசாங்கம் இவர்களை வெளியெற்றுவதில் எந்தவித காத்திரமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது குறிப்பாக வலிகாமம் வடக்கைப் பற்றி மாத்திரம் பேசப்படுகின்றது. அதாவது வலி வடக்கில் பொது மக்களின் காணிகளில் இருந்த இரானுவம் வெளியேற வேண்டுமென்பது சரி.
 ஆனால் அது வலிகாமம் வடக்கில் இருந்து மாத்திரமல்ல யாழ் குடாநாடு உட்பட வடக்கு மாகாணத்திலிருந்தே வெளியேற்றப்பட வேண்டுமென்ற தேவையை இரானுவத்தினரின் ஒவ்வொரு நாள் செயற்பாடுகளும் காட்டிக்கொண்டிருக்கின்றன. 
ஆகவே இந்த அரசாங்கம் அதாவது நல்லாட்சி என்று சொல்லக் கூடிய இந்த அரசாங்கம் மக்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதாக சொல்கின்ற அரசாங்கமானது முதலாவதாக மக்களுக்கு பாதுகாப்பை வழங்கும் வகையில் இந்த இரானுவத்தை இங்கிருந்த எடுக்காவிட்டால் கல்வி, பொருளாதாரம், விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளும் பாதிக்கப்படும். 
இவ்வாறான சூழ்நிலை தொடராமல் சாதாரண சூழ் நிலை ஏற்படுத்தப்பட வேண்டுமாயின் உடனடியாகவே இரானுவத்தை வெளியேற்ற வேண்டுமென்பது தவிர்க்க முடியாததொரு விடயம். 
ஏனவே நாட்டின் ஐனாதிபதியும் பிரதமரும் உடனடியாக இந்தவிடயத்தில் அக்கறை செலுத்தி இவ்வாறான இரானுவ முகாம்கள் எல்லாத்தையும் அகற்ற வேண்டும். விடுதலைப்புலிகள் இருந்தார்கள் என்பதற்காக அவர்கள் வைத்திருந்த காணிககளை வைத்திருக்காது அவற்றை பொது மக்களிடம் கையளித்து சாதாரண சூழலொன்றை உருவாக்க வேண்டும் என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com