வடக்கில் இராணுவமே தேவையில்லை என்கிறோம் அவர்களிற்கு காணிகள் இங்கு எதற்கு – வடக்கு முதல்வர்

CMவடக்கில் இராணுவமே தேவையில்லையென்று நாம் கூறிவருகின்றோம் ஆனால் அவர்கள் இராணுவத்திற்கு காணி தேவை எனக்கூறுவது பொருத்தமற்றதென தெரிவித்துள்ள வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் நிலம், புனர்வாழ்வு, மீள்குடியேற்ற ஆகியன குறித்து வட மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்ட பின்னரும் யாழ்.அரச அதிபர் போர்க்காலம் போன்று இராணுவத்தின் சொல்கேட்டு ஒருதலைப்பட்ச முடிவை எடுப்பது பாதகமான நிலையை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

வடக்கு மக்களின் தேவைகள் வடக்கு மாகாண சபையே தீர்மானிக்க முடியும். இதனை நாம் கருத்தில் கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் கேட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபையை கலந்தாலோசிக்காமல் பாதுகாப்பு அமைச்சினால் எந்த ஒரு தலைப்பட்சமான முடிவுகளையும் வடக்கு மக்கள் தொடர்பில் எடுக்க முடியாது.
சில காணிகள் மட்டும் 2017 இன் இறுதியில் தான் விடுவிக்க முடியும் என இராணுவம் கூறியுள்ளது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளதுடன் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க சுமார் ஆயிரம் ஏக்கர் நிலம் தான் இராணுவ முகாம் அமைப்பதற்கு அதிகபட்சமாக தேவை எனவும் கூறியிருந்தார். அப்படியானால் 3500 ஏக்கர் உடனடியாக திரும்பப் பெறலாம். அதுவும் காரணங்கள் இல்லாமல் ஆயிரம் ஏக்கர் இராணுவத்திற்கு வழங்குவதனை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds