வடக்கில் இனக் கலவன் பாடசாலைகள் கோரும் ஆளுநர் !

11140789_659057690894326_883203809473610013_oவடமாகாணத்தில் தமிழ், சிங்களம், முஸ்லிம் மாணவர்கள் ஒன்றாக கல்வி கற்பதற்காக கலவன் பாடசாலைகள் உருவாக்கப்பட வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்களை இன, மத, பேதமின்றி ஒன்றிணைக்கும் ஓர் இடமே பாடசாலையாகும். இதன் மூலமே நாட்டை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச்செல்ல முடியும். எனவே, கலவன் பாடசாலைகளை உருவாக்குவதன் மூலமே இதனை நிவர்த்தி செய்ய முடியும் எனவும் வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான இடங்களிலேயே சிறந்தவர்களை உருவாக்கலாம். ஆகவே இலங்கையை உலக நாடுகளின் முன்னோடியாக மாற்றுவதற்கான வேலைகளில் நாம் ஈடுபட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இராணுவத்தினரின் உதவியுடன் வட மாகாணத்தில் பல இடங்களில் முன்பள்ளிகள் நடாத்தப்பட்டு வருகின்றமையானது மகிழ்ச்சி தரக்கூடிய விடயம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே வெசாக்கிற்கு தமிழில் பிரார்த்தனை செய்ய அவர் ஆலோசனை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com