சற்று முன்
Home / செய்திகள் / வடக்கிற்கு இராணுவம் தேவையா? இல்லையா? – இராணுவமே தீர்மானிக்கட்டும் – சம்பந்தன்

வடக்கிற்கு இராணுவம் தேவையா? இல்லையா? – இராணுவமே தீர்மானிக்கட்டும் – சம்பந்தன்

வடக்கிற்கு இராணுவப் பாதுகாப்பு தேவையா? இல்லையா? என்பது குறித்து இராணுவமே தீர்மானிக்க வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று பிக்குமார்களை சந்தித்தப் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் வழங்கும் போது அவர் இதனைக் கூறியுள்ளார்.

வடக்கிற்கு இராணுவப் பாதுகாப்பு தேவை என்று நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா கூறியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியாகின.

எனினும் தாம் அவ்வாறு கோரவில்லை என்று பின்னர் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டிருந்தார்.

“ஏனைய மாகாணங்களில் எந்த அளவுக்கு இராணுவம் நிலைகொள்ளச் செய்யப்பட்டுள்ளதோ, அந்த அளவிலேயே வடக்கிலும் பேணப்படுமாக இருந்தால் பிரச்சினையில்லை. அதிகப்படியான இராணுவத்தை அங்கு குவித்து வைத்திருப்பதையே நாங்கள் எதிர்க்கிறோம்.

தற்போது நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளை கருதி, வடக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதை இராணுவமே தீர்மானிக்க வேண்டும்.

நாங்கள் அவ்வாறான கோரிக்கை எதனையும் முன்வைக்கவில்லை.

இராணுவப்பாதுகாப்பு தேவை என்ற தீர்மானத்தை எங்களால் மேற்கொள்ளவும் முடியாது’ என்று இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

எழுச்சிப் பாடகர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள் சாவடைந்தார்

நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான ‘மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி’ ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com