வசிம் தாஜுதீனின் வழக்கை மூடி மறைப்பதற்கு முயற்சி!

வசிம் தாஜுதீனின் வழக்கை மூடி மறைப்பதற்கு ஒரு சில பூதங்கள் கிளம்பியுள்ளன. ஜனநாயகத்தையும் நீதியையும் நிலைநாட்டவே நாம் கூட்டரசை உருவாக்கினோம். கொலை குற்றவாளிகளை அர­சு பாதுகாக்க முற்படுமாயின் ஏன் இதை உருவாக்கினோம் என்று சிந்திக்க வேண்டி ஏற்படும்.

இவ்வாறு கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றில் நீதித்துறை திருத்தச் சட்ட வரைவு, குற்றச்செயல்களுக்கு பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு திருத்த சட்ட வரைவு, குற்றச்செயல்களை தடுத்தல் திருத்த சட்ட வரைவு என்பன மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்த­தாவது:-
நாட்டில் நீதியையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டவே கூட்டரசை உருவாக்கினோம். வசீம் தாஜுதீன் வழக்கைப் பார்க்கும் போது அது தலைகீழாக மாறியுள்ளதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அநுர சேனாநாயக்க உள்ளிட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்­பட்­டா­லும் பிரதான சாட்சியாளரான ஆனந்த சமரசேகர இன்னும் கைது செய்யப்படவில்லை.

இவர்தான் வசிம் தாஜுதீன் விபத்தால் உயிரிழந்தார் என்று மருத்துவ அறிக்கை வழங்கியவர். என்ன நடக்கின்றது. இது நியாயமா?- என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com