சற்று முன்
Home / செய்திகள் / வங்கி கணக்கில் பணம் வைப்பிலிட்டால் சிகிச்சைக்கு முன்னுரிமை – யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளிடம் கொள்ளையடித்த வைத்தியர்

வங்கி கணக்கில் பணம் வைப்பிலிட்டால் சிகிச்சைக்கு முன்னுரிமை – யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளிடம் கொள்ளையடித்த வைத்தியர்

யாழ் போதனா வைத்தியசாலையில் பணியாற்றும் வைத்திய அதிகாரி ஒருவர் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் உபகரணக் கொள்வனவுகள், மருந்துகள் மற்றும் சிசிச்சைக்கான முன்னுரிமை என பெருமளவு நிதியை தனது வங்கிக் கணக்கிற்கு மோசடியாக பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் மற்றும் சுகாதார அமைச்சிற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதனடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

யாழ் போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்திய அதிகாரியான வைத்தியர் டி.எம்.ஏ.எஸ்.திசாநாயக்க என்பவரே இவ்வாறு நோயாளர்களிடம் நிதி மோசடியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட நிலையில் சுகாதார அமைச்சின் விசாரணைப் பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

யாழ் போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைக்காக நோயாளர்கள் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கான சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வைத்தியசாலையில் இல்லை எனவும் அவற்றினை வெளியிலிருந்தே கொள்வனவு செய்யவேண்டும் எனவும் யாழ் போதனா வைத்தியசாலையில் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் வைத்திய அதிகாரியான வைத்தியர் டி.எம்.ஏ.எஸ்.திசாநாயக்க நோயாளிகளிடம் தெரிவித்திருக்கிறார்.

குறித்த உபகரணங்கள் மற்றும் மருந்துகளைக் கொள்வனவு செய்வதற்கு எனவும் சிகிச்சையின் போது முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவித்து ஒவ்வொரு நோயாளிக்கும் என கட்டணங்களை நிர்ணயித்து அப் பணத்தினை கணக்கு இலக்கம் ஒன்றில் வைப்பிலிடுமாறும் அக் கணக்கு இலக்கம் குறித்த உபகரணங்களை அனுப்பும் நிறுவனத்தினது கணக்கு இலக்கம் என்றும் தெரிவித்து பல நோயாளிகளிடம் ஐம்பது ஆயிரம், ஒரு இலட்சம் என பணத்தினை வசூலித்துள்ளார்.

எனினும் இது தொடர்பில் சந்தேகம் எழுப்பப்பட்ட நிலையில் குறித்த கணக்கு இலக்கத்தை ஆராய்ந்து அது அவருடைய கணக்கு இலக்கம் என தெரிவந்த நிலையில் இம் மோசடி தொடர்பில் யாழ் போதனா வைத்திசாலை மற்றும் சுகாதார அமைச்சுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்களைப் பெறுவதற்காக யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளர் சத்தியமூர்த்தியைத் தொடர்புகொண்டு வாகீசம் இணைய ஊடகவியலாளர் என்பதை உறுதிப்படுத்தி கேட்டபோது தொலைபேசி வாயிலாக ஊடகங்களுக்கு எந்த தகவலும் வழங்கவேண்டாம் என உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தன்னால் இவ் விவகாரம் தொடா்பில் உடனடியாக பதிலளிக்க முடியாது என்றும் ஊடக சந்திப்பு ஒன்றின்போது குறித்த விடயம் தொடர்பில் கேட்டால் தன்னால் அப்போது பதிலளிக்க முடியும் எனவும் தெரிவித்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com