சற்று முன்
Home / செய்திகள் / வங்கிக் கடனுக்கு பிணை நின்றதால் 5 இலட்சம் ரூபா செலுத்துங்கள் – 27 வருடங்களுக்குமுன் இறந்தவருக்கு கடிதம் அனுப்பியது சாவகச்சேரி வங்கி

வங்கிக் கடனுக்கு பிணை நின்றதால் 5 இலட்சம் ரூபா செலுத்துங்கள் – 27 வருடங்களுக்குமுன் இறந்தவருக்கு கடிதம் அனுப்பியது சாவகச்சேரி வங்கி

சாவகச்சேரியில் மரணமாகி 27 வருடத்தின் பின், அவருக்கு வங்கியிலிருந்து கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் இந்த சம்பவம் நடந்தது.
சரசாலை தெற்கு சாவகச்சேரியை சேர்ந்தவர் தியாகராசா கமலாவதி. 1991 ஆம் ஆண்டு, நான்காவது பிரசவத்தின் போது சாவகச்சேரி வைத்தியசாலையில் மரணமாகிவிட்டார்.

அவரது கணவர் பரராஜசேகரமும் 1998 இல் ஏற்பட்ட விபத்தில் அகாலமரணமாகி விட்டார்.

இந் நிலையில் 03.05.2018 திகதியிடப்பட்டு தியாகாராசா கமலாவதி, மணிமங்களம், சரசாலை தெற்கு சரசாலை என்ற அவரது பிறந்த வீட்டு முகவரிக்கு, தந்தையின் முன்பெயர் குறிப்பிட்டு சாவகச்சேரி வங்கி ஒன்றினால் கடிதமொன்று அனுப்பட்டுள்ளது.

அந்த கடிதத்தில்- சோரன்பற்று, பளையை சேர்ந்த ஒருவர் வங்கியில் பெற்ற 5 இலட்சம் ரூபா கடன் திருப்பி செலுத்தப்படவில்லையென்றும், தியாகாராசா கமலாவதி ஆகிய நீங்கள் பிணையாளியாக கையெழுத்திட்டுள்ளீர்கள், கடனை உடனடியாக செலுத்தாவிட்டால், பிணையாளி அதற்கு பொறுப்பேற்க வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com