வகுப்புத்தடை விதிக்கப்பட்ட 13 மாணவர்களுக்கு ஆதரவாக கலைப்பீட மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புது மாணவர்களுக்கான கடந்த ( 11-03-2017) அன்று இடம் பெற்ற வரவேற்பு நிகழ்வில் இடம்பெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பான விசாரனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் 13 பேருக்கு காலவரையறை இன்றி வகுப்பு தடை நிர்வாகத்தினால் விதிக்கப்பட்டதை அடுத்து மாணவர்களின் வகுப்புத்தடையை நீக்கக்கோரி இன்று (29) ஏனைய கலைப்பீட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் வழமை போன்று பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தின் கல்விச்செயற்பாடுகள் இன்று(29) ஆரம்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பல்கலைக்கழகத்திற்கு வருகை தந்த கலைப்பீட மாணவர்கள் கல்விச்செயற்பாடுகளை தவிர்த்து பல்கலைக்கழக வளாகத்தின் உள்ளே போராட்டத்தில் ஈடுபட்டனர் .

மேலும் வெளியேற்றப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாகவும் நிர்வாகத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராகவும் தாம் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் எஅவர்கள் தெரிவித்துள்ளனர்..

மேலும் தமது நிலைப்பாடு தொடர்பாக அறிக்கை ஒன்றினையும் பல்வேறு வாசகங்களை உள்ளடக்கிய பதாதைகளை ஏந்தியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
இதேவேளை வகுப்புத்தடை நீக்காவிட்டால் எதிர்வரும் ஏப்ரல் 3ம் திகதி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com