லிபிய விமானக் கடத்தல் முடிபிற்கு வந்தது – கடத்தல்காரர்கள் இருவர் கைது – (2ம் இணைப்பு)

மால்டாவில் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்ட, லிபியா பயணிகள்விமான கடத்தல் சம்பவம் முடிவுக்கு வந்துள்ளது. விமானத்தை கட்டுப்பாட்டில் எடுத்த இரு கடத்தல்கார்ர்கள் தற்போது விலங்கிடப்பட்டு அழைத்து செல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னர், விமானத்தில் பயணம் செய்த அனைத்து பயணிகள் மற்றும் விமான பணியாளர்கள் பத்திரமாக வெளியேற அனுமதிக்கப்பட்டனர்.
கடத்தல்காரர்கள் மால்டாவில் தஞ்சக்கோரிக்கை விடுத்திருந்ததாக கூறப்பட்டது.
லிபியாவின் உள்நாட்டு சேவையான அந்த விமானம் கடத்தப்பட்டபோது, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளும் விமான ஊழியர்களும் இருந்தனர்.

முன்னர் வெளியாகியிருந்த செய்தி
லிபியா பயணிகள் விமானம் 118 பேருடன் கடத்தப்பட்டுள்ளதாகவும், மால்டாவில் கட்டாயமாகத் தரையிறக்கப்பட்டிருப்பதாகவும் விமானப் போக்குவரத்து நிறுவனமான ஆஃப்ரிகியா ஏர்வேஸ் தெரிவித்துள்ளது.

தற்போது மால்டா விான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருக்கும் நிலையில் சில பயணிகள் வெளியேற அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், எத்தனை கடத்தல்காரர்கள் உள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
மால்டா அதிகாரிகள் விமானி அறைக்குத் தொடர்பு கொண்டு பேசியபோது, சில கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், பயணிகள் வெளியேற அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அந்தக் கோரிக்கைகள் என்ன, அவை நிறைவேற்றப்பட்டதா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
ஏர்பஸ் ஏ 320 விமானம், லிபியாவுக்குள் பறந்து கொண்டிருந்தது. ஆஃப்ரிகியா ஏர்வேஸ் விமான நிறுவனத்துக்குச் சொந்தமான விமானம், நடுவழியில் திசை மாற்றப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தை குண்டு வைத்துத் தகர்த்து விடுவதாக மிரட்டி, இரண்டு கடத்தல்காரர்கள் அந்த விமானத்தைக் கடத்தியிருக்கலாம் என ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாதுகாப்பு நடவடிக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மால்டா பிரதமர் ஜோசப் மஸ்கட் தெரிவித்தார்.
விமான நிலையத்தில் சட்டவிரோத இடையூறு ஏற்பட்டிருப்பதாக மால்டா சர்வதேச விமான நிலையம், ட்விட்டரில் செய்தி வெளியிட்டுள்ளது.
அவசர கால படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் பெருமளவிலான சிறப்பு படையினரைக் காண முடிவதாக அங்குள்ள ராய்டர்ஸ் செய்தி முகமையின் புகைப்படைக் கலைஞர் டரின் ஜமிட் லுபி தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், விமானத்தில் உள்ளவர்களுடன் இதுவரை எந்தத் தொடர்பும் ஏற்படுத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மால்டாவுக்கான சில விமானங்கள் இத்தாலியத் தீவான சிசிலிக்குத் திருப்பிவிடப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com