லிபியாவில் போலீஸ் பயிற்சி மையத்தில் குண்டு வெடித்து 50 பேர் பலி?

லிபியாயாவில் போலீஸ் பயிற்சி மையத்தில், குண்டு வெடித்ததில் 50 பேர் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.
லிபியாவின் மேற்கு பகுதியில் ஸ்லிட்டன் என்ற நகரத்தில் உள்ள பயிற்சி மையத்தில் இந்த தாக்குதல் நடைபெற்றதாகவும், சம்பவ இடத்திலேயே 15 பேர் இறந்து போனதாகவும், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு செய்தி நிறுவனம் ‘லானா’ தெரிவித்துள்ளது.

அதே வேளையில் இந்த தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாகவும், 127 பேர் காயமுற்றிருப்பதாகவும் திரிபோலியை சேர்ந்த மற்றொரு செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
டிரக் ஒன்றில் வெடிகுண்டுகளை நிரப்பி, தற்கொலை படை தீவிரவாதி இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds