லாகூர் பயங்கரவாத தாக்குதலுக்கு ஜனாதிபதி கண்டனம்

அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து பாகிஸ்தானின் லாகூர் நகரில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலை தான் வன்மையாகக் கண்டிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப்புக்கு அனுப்பி வைத்த விசேட செய்தியில் ஜனாதிபதி குறிப்பிடுகையில், சோகமான இச்சந்தர்ப்பத்தில் இலங்கை அரசு பாகிஸ்தான் அரசாங்கத்துடனும் மக்களுடனும் ஒன்றிணைந்து சோகத்தில் பங்கு கொள்வதாகத் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு இலக்கான குடும்ப உறுப்பினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துள்ள ஜனாதிபதி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவதற்கு தாம் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தமது நாட்டு மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது ஆசியாவின் அரசாங்கங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பாரிய பொறுப்பாகுமென்றும் ஜனாதிபதி தனது செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com