லலித் ஜயசிங்கவுக்குப் பிணை!

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் சந்தேக நபர் ஒருவரைத் தப்பிக்க உதவி செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் சிரேஸ்ட   பிரதிப் பொலிஸ் மாஅதிபர் லலித் ஏ ஜயசிங்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

இன்றைய தினம்(13) ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில்  நடைபெற்ற குறித்த வழக்கின் போது  3 லட்சம் பெறுமதியான காசுப் பிணையிலும் 5 லட்சம் ரூபா பெறுமதியான 4 ஆள்பிணையிலும் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மேலும்   அவரது கடவுச் சீட்டை முடக்கவும் வெளிநாடு செல்வதற்குத் தடை விதித்தும் நீதிமன்று உத்தரவிட்டதுடன் வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 5 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதன் போது   கடந்த சில தினங்களாக  அவரது விளக்கமறியல் தொடர்ச்சியாக நீடிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று (13) அவர் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டமை குறிப்பிடத்த்ககது.

வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மாஅதிபராகக் கடமையாற்றிய லலித் ஏ  ஜயசிங்க கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலம் வழங்கச் சென்றபோது கைது செய்யப்பட்டார்.

மாணவி கொலை   வழக்கின் சந்தேகநபரான மகாலிங்கம் சசிக்குமார் (சுவிஸ்குமார்) என்பவர் தப்பிச் செல்வதற்கு உதவினார் என்ற குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com