லசந்த கொலை தொடர்பில் புலனாய்வு அதிகாரி கைது

lasantha-1பிரபல ஊடகவியலாளரும் சண்டேலீடர் பத்திரிகையின் ஸ்தாபக ஆசிரியருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில், இராணுவ புலனாய்வுப் பிரிவு உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரகசிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட குறித்த நபரை, தடுத்து வைத்து விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லசந்த, கடந்த 2009ம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அத்திடிய பகுதியில் வைத்து ஆயுத தாரிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com