லசந்தவை கொன்றது நானே – முன்னாள் இராணுவ அதிகாரி கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை

lasantha_wick1கேகாலை – கரடுபான பகுதியில், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

51 வயதான இவர் மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும், தனது வீட்டில் வைத்தே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, இவரால் இறப்பதற்கு முன்னர் கடிதம் ஒன்றும் எழுதிவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அதில் லசந்த விக்ரமதுங்கவை கொலை செய்தது நானே, இந்தக் கொலை வழக்கில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு அதிகாரியை விடுதலை செய்ய வேண்டும் என எழுதப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கேகாலை பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கேகாலை பொலிஸார் இது குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds