ரோஹிங்யா அகதிகள் விவகாரம் – கடுமையான நடவடிக்கை!

ரோஹிங்யா முஸ்லிம் அக­திகள் விவ­கா­ரத்தில், மனித நேய­மின்றி நடந்­து­கொண்டோருக்கு எதி­ராக கடு­மை­யான நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர தெரி­வித்தார்.

கல்­கிசை பகு­தியில் கடந்த செப்ெ­டம்பர் 26 ஆம் திகதி பிக்­கு­களின் தலை­மையில், ரோஹிங்யா முஸ்லிம் அக­தி­க­ளுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­பட்ட அத்துமீறல்கள் தொடர்பில் கருத்து வெளி­யிடும்போதே பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜய­சுந்­தர இதனைத் தெரி­வித்தார்.

குறித்த சம்­ப­வத்தை வன்­மை­யாக கண்­டித்த பொலிஸ் மா அதிபர், தனிப்­பட்ட நிகழ்ச்சி நிரல்­க­ளுக்­காக செயற்­பட்டு மனித நேய­மற்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டோ­ருக்கு மன்­னிப்பு கிடை­யாது எனவும் அவர்­க­ளுக்கு எதி­ராக கடும் சட்ட

நட­வ­டிக்­கை எடுக்­க­ப்படும் எனவும் கூறினார். குறித்த சம்­பவம் பதி­வான போது சீனாவில் இடம்­பெற்ற மாநா­டொன்றில் கலந்­து­கொண்­டி­ருந்த பொலிஸ் மா அதிபர் நாடு திரும்­பி­யதும், அந்த சம்­பவம் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் தொடர்பில் தக­வல்­களை கேட்­ட­றிந்­துள்ளார்.

இதன்போது அடை­யாளம் காணப்­படும் ஒவ்­வொரு சந்­தேக நப­ரையும் உடன் கைது செய்ய கொழும்பு குற்றத்தடுப்புப் பிரி­வுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்ளார். இந்நிலையில் சுமார் 8 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் மா அதிபர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com