ரோலர் இயந்திரம் மண்ணுக்குள் புதையுண்டுள்ளது – பொல்பிட்டிய பகுதியில் சம்பவம்…

IMG_9819 IMG_9843 IMG_9860 IMG_9862 IMG_9872 IMG_9879 vlcsnap-2016-08-31-07h38m38s208கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொல்பிட்டிய புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்திற்கு நீர் உள்வாங்கும் சுரங்கப்பாதையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோலர் இயந்திரம் மண் தாழிறக்கத்தால் முற்றாக மண்ணால் புதையுண்டிருப்பதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் 31.08.2016 அன்று  12.30 மணியளவில் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கும் பொலிஸார் சுரங்கப்பாதையில் மேற்புற பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடியிருப்புகளில் சில வீடுகள் சரிந்து விழும் மிகவும் ஆபத்தான நிலையில் காணப்படுவதாகவும், தெரிவித்தனர்.

ஏற்கனவே இவ்விடத்தில் 50 அடி ஆழத்தில் வீடு ஒன்று புதையுண்ட சம்பவமும் இடம்பெற்றுள்ளது. அவ் இடிபாடுகளை சீர் செய்வதற்கு என அமைக்கப்பட்ட கல் குவியலும் சரிந்து மண்ணுள் புதையுண்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்துடன் இருக்கின்றனர்.

அவ்விடத்திலிருந்து ஏனைய பொது மக்களை உடனடியாக வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை முற்றாக மண்ணால் மூடப்பட்டுள்ள ரோலர் இயந்திரம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புரோட்லேண்ட் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சுரங்கபாதைகள் அமைக்கப்படுவதனால் அதில் ஏற்படும் அதிகமான அதிர்வுகள் காரணமாகவே இவ்வாறான சம்பவங்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.

எனினும் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com