ரெலோ இரண்டாக உடைகிறதா ? குழுக்களின் பிரதித் தலைவர் பதவியைத் தக்கவைக்க செல்வம் தமிழரசுடன் இரகசியப் பேச்சு !!

உள்ளுராட்சி சபை தேர்தல் கூட்டு தொடர்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசப்போவதாக டெலோ அறிவித்துள்ள நிலையில் குழுக்களின் பிரதித் தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக செல்லம் அடைக்கலநாதன் தமிழரசுக் கட்சியுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுவருவதாக தெரியவந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக செல்வம் அடைக்கலநாதன் நேற்று பிற்பகல் கொழும்பில் தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளார். அதன்போது தனக்கு வழங்கப்பட்ட குழுக்களின் பிரதித்தலைவர் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக எந்தவகையிலான விட்டுக்கொடுப்பிற்கும் இணக்கம் தெரிவித்திருப்பதாக தெரியவந்துள்ளது.

செல்வம் அடைக்கலநாதனின் இம் முடிவு ரெலோவின் தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பில் நேற்று இரவு ரெலோவின் தலைவர்களில் ஒருவரான சட்டத்தரணி ஸ்ரீகாந்தா
ஊடகங்களிற்கு கருத்து வெளியிடுகையில்
உள்ளுராட்சி தேர்தல் கூட்டு தொடர்பில் ஈபிஆர்எல்எவ், தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் புளொட் அமைப்புடன் பேச்சுகளை நடத்தியதாக தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் பேசப்போவதாக அவர் மேலும் தெரிவித்தார். கூட்டமைப்பின் பிளவினை உடனடியாக சீர்செய்யுமாறு இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதன் தலைவர் இரா.சம்பந்தனிற்கு பணித்துள்ள நிலையில் இரா.சம்பந்தனும் தன்னுடன் தொடர்பு கொண்டதாகவும் சிறீகாந்தா தெரிவித்தார்.
கிழக்கு மற்றும் முல்லைதீவு மாவட்டங்களில் தமிழரசுக்கட்சி விட்டுக்கொடுப்பின்றி செயற்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர் தமது கட்சி சுமூகமான சூழலையேற்படுத்த பெருமளவு விட்டுக்கொடுப்புக்களை செய்த போதும் தமிழரசுக்கட்சி அதற்கு தயாராகவில்லையென தெரிவித்தார்.
இதனிடையே டெலோ தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழரசுக்கட்சி முக்கியஸ்தர்களுடன் இரகசியப் பேச்சுக்கள் நடத்தியமை தொடர்பாக தமக்கு தெரியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com