ரெலோவுக்குள் குழப்பம்!

வடமாகாண அமைச்சரவை மாற்றத்தின்போது தமது கட்சிக்குரிய அமைச்சுப் பதவியினை யாருக்கு வழங்குவது என்பது குறித்து ரெலோ அமைப்புக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

இது தொடர்பாக எதிர்வரும் 12ஆம் திகதி வவுனியாவில் இடம்பெறும்கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரெலோ கட்சி சார்பில் போக்குவரத்து அமைச்சராக இருந்த டெனீஸ்வரனை கட்சியிலிருந்து நீக்கியதுடன், அவரது அமைச்சர் பதவிக்கு விந்தன் கனகரட்ணத்தை ரெலோ அமைப்பு நியமித்திருந்தது.

இருப்பினும் டெனீஸ்வரன் மன்னார் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர். விந்தன் கனகரட்ணம் யாழ்ப்பாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது அமைச்சரவை முழுமையாக மாற்றியமைக்கப்படும் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் விலகியதையடுத்து அவ்விடத்திற்கு ரெலோ அமைப்பிலிருந்து, மருத்துவர் குணசீலனை நியமிக்கலாம் எனப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் மன்னார் மாவட்ட பிரதிநிதித்துவத்தைப் பாதுகாக்கமுடியும் என ரெலோ அமைப்புக் கருதுகின்றது.

அத்துடன், முதலில் அமைச்சுப் பதவியை நிராகரித்த சிவாஜிலிங்கம் தற்போது அமைச்சுப் பதவியை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இது தொடர்பாக எதிர்வரும் 12ஆம்திகதி இறுதி முடிவு எடுக்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com