ரெலோவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்த தமிழரசு முயற்சி – பிரதேச வாதத்தை கையிலெடுத்தது

அமைச்சர் பா.டெனீஸ்வரனுக்குப் பதிலாக ரெலோவின் சார்பில் அமைச்சரவைக்கு வடக்கு மாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணத்தை நியமிப்பதற்கு ரெலோ முடிவெடுத்துள்ள நிலையில் அதனை குழப்பி முறியடிப்பதற்கும் பிரதேசாத மோதல்களை கட்டவிழ்த்துவிடுவதற்கு தமிழரசு திரைமறைவில் சதி செய்துவருவாதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சரவையில் ரெலோவின் சார்பில், மன்னார் மாவட்டத்தைப் பிரதிநித்துவப்படுத்திய பா.டெனீஸ்வரன் 2013ஆம் ஆண்டு அமைச்சராக நியமிக்கப்பட்டார். தற்போது அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவர் கட்சிகொள்கைகளிற்கு விரோதமாக நடப்பதாகக் கூறி அவரது அமைச்சர் நியமனத்தை மீளப்பெறவும் அவருக்குப் பதிலாக வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினத்தை அமைச்சராக நியமிப்பதற்கும் தீர்மானம் மேற்கொண்ட கட்சித் தலைமை அது தொடர்பில் முதலமைச்சருக்கும் அறிவித்திருப்பதாக தெரியவருகின்றது.
இந்நிலையில் இதனைத் தடுத்து நிறுத்தி குழப்ப நிலை ஒன்றினை மேற்கொள்வதற்கு தமிழரசு முயன்றுவருவதாக தெரியவருகின்றது. விந்தன் கனகரத்தினம் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஏற்கனவே மூன்று அமைச்சர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்னர் இது ஏனைய மாவட்ட மக்களை வஞ்சிக்கும் செயல் எனும் தொனியில் தமிழரசு ஊடகத்தின் வாயிலாக பிரசார நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளது.

இதேவேளை நம்பிக்கையில்லா தீர்மான விடயம் சறுக்கிப்போன நிலையில் முதலமைச்சருக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்த கட்சிகளுக்குள் ஒருவரை ஒருவர் தீண்டிவிட்டு குறித்த கட்சிகளைப் பலவீனமடையச் செய்யும் திரைமறைவு வேலைகளையும் மேற்கொண்டுவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் அங்கமாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டத்தில் கதைக்கப்பட்ட விடையங்கள் தொடர்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்குள் பிழவுகளை மேற்கொள்ள முயற்சித்ததுபோல தற்போது அமைச்சர் நியமன விடயத்தை தமக்கு சாதகமாக்கி ரெலோவிற்குள் பிழவுகளை ஏற்படுத்த முனைவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com