சற்று முன்
Home / சினிமா / ரூ.240 கோடிக்காக நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலையா? – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

ரூ.240 கோடிக்காக நடிகை ஸ்ரீதேவி திட்டமிட்டு கொலையா? – உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு

டுபாயில் உறவினரின் திருமண நிகழ்ச்சிக்காக சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த பெப்ரவரி மாதம் 24ம் திகதி காலமானார். முதலில் மாரடைப்பு என கூறப்பட்டு வந்த நிலையில், மது அருந்தி குளியலறை தொட்டிக்குள் விழுந்ததே காரணம் என கூறப்பட்டது.

இவரின் மரணத்தில் எவ்வித சந்தேகமும் இல்லை என கூறிய டுபாய் பொலிஸார் ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைத்தனர்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இயக்குனர் சுனில் சிங் உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அதில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தவேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இன்று இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, சுனில் சிங் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விகாஸ் சிங், ஸ்ரீதேவி பெயரில் ரூ.240 கோடி இன்சூரன்ஸ் பாலிசி உள்ளது.

ஐக்கிய அரபு நாடுகளில் மரணமடைந்தால் மட்டுமே இது கிடைக்கும், இந்த நிலையில் தான் ஸ்ரீதேவி மரணமடைந்துள்ளார், எனவே அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளது என வாதாடினார்.

ஆனால் டுபாய் பொலிஸார் நடத்திய விசாரணையில் சந்தேகப்படுவதற்கு ஏதுமில்லை என கூறிய நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com