ராஜீவ் கொலை வழக்கில் 3 பேர் விடுவிக்கப்படலாம்: சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகிறது – மத்திய அரசு ஒப்புதல் இல்லை

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் 7 பேரில் 3 பேர் விடுவிக்கப்படலாம் என சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. எனினும் விடுதலை தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை.
செய்யாறு சிறப்பு முகாமில் இருந்த 4 வெளிநாட்டு கைதிகள் திருச்சி சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். கைதிகள் சிறை மாற்றத்தை தொடர்ந்து ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து 7 பேரில் 3 பேர் விடுதலை குறித்து சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது.
இந்நிலையில் நளினி, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுக்கும் தமிழக அரசின் முடிவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராது என புதுடில்லித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டச் சிக்கலைத் தவிர்க்கும் வகையில் மத்திய அரசு எச்சரிக்கை காக்கும் என மத்திய அரசு உயர் அலுவலர்கள் தரப்பில் கூறப்படுகிறது. வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இருப்பதால் நீதிமன்ற தீர்ப்புக்காக காத்திருக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. சட்ட ஆலோசனைகளைப் பெற்ற பிறகே, தமிழக அரசின் கடிதத்தின் மீது நடவடிக்கை குறித்து முடிவெடுக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இந்த விஷயத்தில் அரசு தலைமை வழக்கறிஞரின் ஆலோசனையைப் பெறவும்,
தேவைப்பட்டால், சட்ட நிபுணர்கள் ஆலோசனையுடன் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலையும் பெறவும் பரிசீலிக்கப்படுகிறது. 7 பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் முறையான ஆலோசனைகளின் அடிப்படையிலேயே மத்திய அரசு முடிவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது. அவசரமாக இந்த விஷயத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வழக்குகளின் பின்னணி மற்றும் உச்ச நீதிமன்றத்தின் கருத்துக்களை வழிகாட்டுதலாகக் கொள்ளவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds