சற்று முன்
Home / செய்திகள் / ராஜித வசமிருந்த சுகாதார அமைச்சு அலுவலகத்திற்கு சீல்

ராஜித வசமிருந்த சுகாதார அமைச்சு அலுவலகத்திற்கு சீல்

காவல்துறை அதிகாரிகளுடன் சென்ற ஜனாதிபதியின் செயலக அதிகாரிகள், குழுவொன்று, சுகாதார அமைச்சின் பணியகத்தை நேற்று முத்திரையிட்டு மூடியுள்ளதாக கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் இருந்து சில ஆவணங்களை அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அகற்ற முயற்சிப்பதாக கிடைத்த தகவல்களை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அரசியல்வாதி ஒருவரின் எடுபிடிகளோ சுகாதார அமைச்சின் ஆவணங்களை அகற்ற முயன்றதாக, ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்க மருத்துவத் துறை நியமனங்கள் மற்றும் மருந்துகள் கொள்வனவு தொடர்பான, சில ஆவணங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிலரால் அகற்றப்பட்டிருக்கக் கூடும் என்றும் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அதேவேளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய நகர்வுகளை சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், அவரைக் குறிவைத்தே இந்த நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் சந்தேகங்கள் எழுந்துள்ளன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com