சற்று முன்
Home / இந்தியா / ராஜஸ்தானில் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு.

ராஜஸ்தானில் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழப்பு.

ராஜஸ்தானில் சுமார் 5 ஆயிரம் பறவைகள் உயிரிழந்தமைக்கு நச்சு உணவே காரணம் எனத் தெரியவந்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே சாம்பார் ஏரி உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய உப்புநீர் ஏரியாக இது விளங்குகிறது.

இங்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வெளிநாடுகளில் இருந்து இலட்சக்கணக்கான பறவை இனப் பெருக்கத்துக்காக வந்து செல்லும்.

இந்நிலையில் அந்தப் பகுதியில் 4,800-க்கும் மேற்பட்ட பறவைகள் அண்மையில் மர்மமான முறையில் உயிரிழந்தன.

இது குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொண்ட ராஜஸ்தான் கால்நடை பல்கலைக்கழகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில், இறந்து கிடந்த புழுக்களை தின்றதால் இப்பறவைகளுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், நரம்பு மற்றும் தசைகளை கடுமையாக பாதிக்கும் உயிர்க்கொல்லி நோய்தான் இதற்கு காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com