ராஜபக்ஸவினர் நாட்டில் ஒரு சதத்தையேனும் கொள்ளையடிக்க வில்லை – உதய கம்மன்பில

ராஜபக்ஸவினர் ஒரு சதத்தையேனும் களவாடினார்கள் என்பதற்கு இதுவரை ஒரு வழக்கேனும் தாக்கல் செய்யப்படவில்லை என பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தை வெளியிட்டார்.

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இந்த அரசாங்கத்தின் பொறுப்புள்ள அமைச்சராவார்.

ஆனால், ஒரு ஊடகப் பேச்சாளர் வழிபோக்கனைப் போன்று அரச நிகழ்வொன்றில் செயற்பட்டு ஆற்றிய உரையை நாங்கள் கண்டோம்.

அவரின் ஒரு கேள்விக்கு நாங்கள் விடை கூற விரும்புகிறோம்.

அவர் கூறுகிறார், ஊர்வலம் போகும் மக்களே! சென்று ராஜபக்ஸவினரின் வீடுகளுக்கு சென்று களவாடிய பொருட்களையும் பணத்தையும் கேட்டுவாங்குங்கள் என்று.

அவருக்கு நாங்கள் கூறுவது, நீங்கள் ஜனாதிபதி தேர்தலின் போது கூறியிருந்தீர்கள், மெகா ஒப்பந்தம் பற்றி,, அந்த பாரிய பொய்களுக்கு ஏமாற்றமடைந்துதான பொதுமக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்,

எனவே. பொதுமக்களிடம் சென்று கள்ளர்களை பிடிக்கச் சொல்ல வேண்டாம்.

கள்ளர்களை பிடிக்கத்தான் பொதுமக்கள் தமது ஆணையை வழங்கினார்கள்,

ஆனால், ராஜபக்ஸவினர் களவாடினார்கள் என்பதற்கு சான்று இருந்தால் அவர்களை பிடித்து சிறையிலிடுங்கள், இதை பொதுமக்களிடம் சென்று அறைகூவல் விடுக்க ​வேண்டாம்.

எனவே. அவ்வாறான எந்தவொரு களவையும் கடந்த இரண்டு வருடங்களில் பிடிக்க முடியாமல் போனமைதான் உண்மையான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com