சற்று முன்
Home / உலகம் / ரஷ்ய தூதர் கொலைக்கு அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம்

ரஷ்ய தூதர் கொலைக்கு அமெரிக்க புதிய ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கண்டனம்

அமெரிக்க புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், துருக்கியில் நடந்த ரஷ்ய தூதர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

துருக்கிக்கான ரஷ்ய தூதராக ஆண்ட்ரே கார்வேஸ் பதவி வகித்து வந்தார். இவர் அங்காரவில் நடந்த ஓவிய கண்காட்சியை பார்வையிட வந்தார்.

அப்போது அவரை மெவ்லட்மெர்ட் அய்டின் டாஸ் (22) என்ற பொலிஸ்காரர் துப்பாக்கியால் சுட்டார். இதனால் படுகாயம் அடைந்த அவர் உயிரிழந்தார். சிரியாவில் அலப்போ நகரில் ரஷ்யாவும், துருக்கியும் இணைந்து கிளர்ச்சியாளர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ரஷ்ய தூதர் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள டொனால்டு டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

துருக்கியில் தீவிரவாதியால் சுட்டுக் கொல்லப்பட்ட ரஷ்ய தூதர் ஆண்ட்ரே கார்லோவின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். தூதர் கொலை செய்யப்பட்டதன் மூலம் அனைத்து வாழ்வாதார சட்டங்களும் மீறப்பட்டுள்ளது. அது கண்டனத்துக்குரியது.

ஜெர்மனியில் பெர்லினில் ஒன்றும் அறியாத அப்பாவிகள், வீதிகளில் கிறிஸ்மஸ் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்தவர்கள். தீவிரவாதிகளால் லொறி ஏற்றி கொல்லப்பட்டுள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எங்களது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கிறிஸ்தவர்களையும், அவர்களது வழிபாட்டு தளங்களிலும் ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி கொன்று வருகின்றனர். இந்த தீவிரவாத கும்பல், பூமியில் இருந்து அகற்றப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்று கூறியுள்ளார்.

ஜனாதிபதி ஒபாமா ஹவாயில் விடுமுறையை கழித்து வருகிறார். இது குறித்து தனது தேசிய பாதுகாப்பு உதவியாளரிடம் கேட்டறிந்தார். மேலும் அமெரிக்கா வெளியுறவு துறை செயலாளர் ஜோன் கெர்ரி ரஷ்ய தூதர் கொலைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்த அமெரிக்கா உதவி செய்யும் என உறுதி அளித்துள்ளார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

13 வயது பாலச்சந்திரன் புலிகளின் சிறுவர் படையணியின் பிரதான கட்டளை அதிகாரியாம் சரத் பொன்சேகா புதுக் கண்டுபிடிப்பு

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், விடுதலைப் புலிகள் அமைப்பின் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com