ரவிராஜ் கொலை முதன்மைச் சந்தேக நபருக்கு பிடியாணை!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ந.ரவிராஜ் கொலை வழக்கின் முதன்மைச் சந்தேகநபரான நேவி சம்பத்துக்கு எதிராக பிடியாணை பிறப்பித்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்றம், சிங்கள அறங்கூறும் சபையின் ஏகமனதான முடிவின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட 5 சந்தேக நபர்களையும் விடுவித்து கடந்த டிசெம்பர் மாதம் 24 ஆம் திகதி தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்தத் தீர்ப்புக்கு எதிராக, நடராஜா ரவிராஜின் மனைவியால் மேன்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, வழக்கின் முதன்மைச் சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளதால் அவருக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

ரவிராஜின் மனைவி சார்பில், மன்றில் அரச சட்டத்தரணியும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் நிரான் அங்கிரல் ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com