ரவிராஜ் கொலை வழக்கின் தீர்ப்பில் உடன்பட மறுக்கிறேன் – அமைச்சர் ராஜித

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலை வழக்கு தீர்ப்பு தொடர்பில் தான் உடன்பட மறுப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேசிய வைத்தியத்துறை அமைச்சரும் அமைச்சரவை துணைப்பேச்சாளருமான டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரச தகவல் திணைக்களத்தில் புதன்கிழமை (04) இடம்பெற்ற 2017ம் ஆண்டின் முதலாவது அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டிலேயே இந்த விடயத்தை குறிப்பிட்டார்.

ரவிராஜ் கொலைசெய்யப்பட்டுள்ளார். இந்த தீர்ப்பு விடயத்தில் பிரச்சினைகள் உண்டு. ரவிராஜ் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டதுபோலவும் அவரது மெய்க்காவலர்களும் தாமாகவே சுட்டுக்கொண்டனர் போன்றதுமான நிலைப்பாட்டையே இந்த தீர்ப்பின் மூலம் உணரமுடிவதாக அமைச்சர் கூறினார்.

சட்டமா அதிபர் தற்பொழுது இதுதொடர்பில் மேன்முறையீட்டு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார் என்றும் அவர் தெரிவித்தார்.

எனினும் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜின் கொலைத்தீர்ப்பை அடுத்து வெளிநாட்டு நீதிபதிகளின் தலைமையில் இவ்வாறான சம்பவங்கள் குறித்து விசாரணை நடத்தப்படவேண்டும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பில் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனரே இது குறித்து அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? ஊடகவியலாளர்கள் கேள்விஎழுப்பிபோது,

வெளிநாட்டு நீதிபதிகளுக்கு இங்கு இடமில்லை. அவர்கள் தலைமையில் நீதிவிசாரணை இங்கு இடம்பெறாது. அவர்கள் நீதிபதிகளாக இங்கு அமரமுடியாது.ஆனால் வெளிநாட்டு நீதிபதிகளின் தொழில்நுட்ப ஒத்துழைப்பை நாம் பெற்றுக்கொள்ள முடியம். ஐக்கிய நாடுகள் சபையும் இந்த விடயத்தில் உடன்பட்டுள்ளது என்றார் அவர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com