ரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் திறந்து வைப்பு

பத்தனை கிறேக்கிலி தோட்டத்தில் கரப்பந்தாட்ட விளையாட்டு மைதானம் 21.08.2016 அன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் தலைமையில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.

10 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் இந்த மைதானம் புனரமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முத்து சிவலிங்கம், மத்திய மாகாண விவசாயத்துறை அமைச்சர் எம்.ரமேஷ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், பிலிப்குமார், இ.தொ.காவின் இளைஞர் அணி அமைப்பளார் ராஜமணி பிரசாத் மற்றும் பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.DSC02966 DSC02975 DSC02995 DSC03019 vlcsnap-2016-08-21-21h43m18s61 vlcsnap-2016-08-21-21h43m40s31

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com