சற்று முன்
Home / செய்திகள் / ரணில் தலையில் விழுந்த இடி – ஜனாதிபதி வேட்பாளராக சஜித் விருப்பம்

ரணில் தலையில் விழுந்த இடி – ஜனாதிபதி வேட்பாளராக சஜித் விருப்பம்

ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிடுவதற்கு தான் தயாராக இருப்பதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவின் 30 வருட அரசியல் வாழ்வை கௌரவிக்கும் நிகழ்வில் உரையாற்றும்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

“தந்தையின் பெயராலே நாட்டின் 220 லட்சம் மக்களின் சேவகனாக 24 மணிநேரமும் என்னை அர்ப்பணிக்க நான் தயாராகவுள்ளேன். அதற்கு நான் தயார்.” என்று அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் மங்கள சமரவீர ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுவதற்கு சஜித் பிரேதமாசவே தகுதியானவர் எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் மங்கள சமரவீரவின் கௌரவிப்பு நிகழ்வில் சஜித் பிரேமதாச தனது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கிறார்.

இது ஜனாதிபதியாகும் கனவில் மிதக்கும் ரணில் விக்கிரமசிங்கவிற்கு பேரிடியாக அமைந்துள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com