சற்று முன்
Home / செய்திகள் / ரணில் ஒரு போதும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க போவதில்லை..

ரணில் ஒரு போதும் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க போவதில்லை..

ரணில் விக்ரமசிங்க ஒரு போதும் சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்க போவதில்லை என ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

பதுளையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் பதவியை போராடியே பெற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்க்கட்சி தலைவர் பதவியை அல்லது பிரதமர் பதவியை பெற்றுக்கொள்வதே ஒரே நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ரணில் விக்ரமசிங்க தனி நபர் ஒருவருக்கு வேட்பாளர் பதவி வழங்க மாட்டார் எனவும் அவர் மேலும் கூறினார்.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

முல்லைத்தீவில் ஊடகவியலாளர் மீது இராணுவத்தினர் தாக்குதல்

இராணுவத்தினரின் தாக்குதலுக்கு இலக்கான முல்லைத்தீவு ஊடகவியலாளர் முல்லைத்தீவு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவை சேர்ந்த சுயாதீன ஊடகவியலாளரான ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com