சற்று முன்
Home / செய்திகள் / ரணில் ஒரு நம்பிக்கைத் துரோகி – உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

ரணில் ஒரு நம்பிக்கைத் துரோகி – உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத்

த‌ன‌க்கு வாக்க‌ளித்த‌ த‌மிழ் ம‌க்க‌ளுக்கு நான் ந‌ன்றியுள்ள‌வ‌னாக‌ இருப்பேன் என்றும் அத‌ற்கு ந‌ன்றியாக‌ அர‌சிய‌ல் யாப்பு திருத்த‌த்தை கொண்டு வ‌ருவேன் என்றும் முன்னாள் பிர‌த‌ம‌ர் சொல்லியிருப்ப‌துட‌ன் த‌ன‌க்கு வாக்க‌ளித்த‌ முஸ்லிம்க‌ளுக்கு ந‌ன்றிக்க‌ட‌னையும் செய்யாம‌ல் இருப்ப‌து ப‌ற்றி வாய் திற‌க்காம‌ல் விட்டுள்ளார் என‌ உல‌மா க‌ட்சித் த‌லைவ‌ர் முபாற‌க் அப்துல் ம‌ஜீத் தெரிவித்தார்.

க‌ட்சி த‌லைமைய‌க‌த்தில் ந‌டை பெற்ற‌ க‌ல‌ந்துரையாட‌லில் அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,

த‌மிழ் ம‌க்க‌ளுக்கு ந‌ன்றியாக‌ அவ‌ர் அர‌சிய‌ல் யாப்பை மாற்ற‌லாம். அந்த‌ யாப்பில் வ‌ட‌க்கும் கிழ‌க்கும் இணைக்க‌ப்ப‌ட‌ வேண்டும் என்ப‌தே த‌மிழ் கூட்ட‌மைப்பின் எதிர் பார்ப்பாகும். அதை விட‌ வேறு எதுவும் த‌மிழ‌ர்க‌ளுக்கு ந‌ன்றிக்க‌ட‌னாக‌ இருக்காது. ஆனால் அதுவே முஸ்லிம்க‌ளுக்கு திரு. ர‌ணில் செய்யும் ந‌ன்றி கெட்ட‌ செய‌லாகும்.

க‌ட‌ந்த‌ பொது தேர்த‌லில் ஐ தே க‌ சார்பு இல்லாத‌ ம‌ஹிந்த‌ சார்பு ட‌க்ள‌ஸ், தொண்ட‌மான் போன்றோரும் த‌மிழ் ம‌க்க‌ளால் தெரிவு செய்ய‌ப்ப‌ட்ட‌ன‌ர். ஆனால் முஸ்லிம்க‌ள் ஐ தே க‌ சார்பு முஸ்லிம்க‌ளை ம‌ட்டுமே தெரிவு செய்த‌துட‌ன் ம‌ஹிந்த‌ சார்பு முஸ்லிம்க‌ள் அனைவ‌ரையும் நிராக‌ரித்து ர‌ணிலுக்கு த‌ம் அதீத‌ விசுவாச‌த்தை காட்டின‌ர். அத‌ற்கு ந‌ன்றிக்க‌டனாக‌ அம்பாரை பள்ளிவாய‌ல் உடைக்க‌ப்ப்ப‌ட்ட‌து. திக‌ண‌, க‌ண்டி, கின்தோட்டை எரிந்த‌து. இன்று வ‌ரை முஸ்லிம்க‌ளின் ந‌ல‌னுக்கென‌ ர‌ணில் எதையும் பிர‌த்தியேக‌மாக‌ செய்ய‌வுமில்லை, செய்வ‌தாக‌ அறிவிக்க‌வில்லை.

ஆக‌ குறைந்த‌து முஸ்லிம்க‌ளுக்கு ந‌ன்றிக்க‌ட‌னாக‌ எந்த‌ வ‌கையிலும் வ‌ட‌க்கு கிழ‌க்கை இணைக்கும் அர‌சிய‌ல் சாச‌ண‌த்துக்கு இட‌ம் கொடுக்க‌ மாட்டோம் என‌வும் சொல்ல‌வில்லை.

ஆக‌வே க‌ட‌ந்த‌ ஜ‌னாதிப‌தி ம‌ற்றும் பொது தேர்த‌ல்க‌ளில் 99 வீத‌ம் ஐ தே க‌ சார்புக்கு வாக்க‌ளித்த‌ முஸ்லிம்க‌ளுக்கு ந‌ன்றிக்க‌ட‌னாக‌ இப்போதாவ‌து அவ‌ர்க‌ளின் கோரிக்கைக‌ளை ஏற்று அவ‌ற்றை தாம் மீண்டும் ஆட்சிக்கு வ‌ந்தால் செய்வ‌தாக‌ ப‌கிர‌ங்க‌மாக‌ திரு. ர‌ணில் அறிவிக்க‌ வேண்டும். இல்லாவிட்டால் திரு. ர‌ணில் எத்த‌கைய‌ ந‌ன்றி கெட்ட‌வ‌ர் என்ப‌தையாவ‌து முஸ்லிம் ச‌மூக‌ம் புரிந்து கொள்ள‌ வேண்டும்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com