சற்று முன்
Home / செய்திகள் / “ரணில் இரண்டு ஜனாதிபதிகளால் ஓட ஓட விரட்டப்பட்டவர்” – கெஹலிய கிண்டல்

“ரணில் இரண்டு ஜனாதிபதிகளால் ஓட ஓட விரட்டப்பட்டவர்” – கெஹலிய கிண்டல்

” இரண்டு ஜனாதிபதிகளால் ஓட ஓட விரட்டப்பட்ட பிரதருக்கே, நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது’ என்று ரணில் விக்கிரமசிங்கவை கூட்டுஎதிரணி நாடாளுமன்ற உறுப்பினரான கெஹலிய ரம்புக்வெல்ல கேலி செய்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே கூட்டுஎதிரணி எம்.பியான கெஹலிய ரம்புக்வெல்ல இவ்வாறு கேலி செய்துள்ளார்.

ரணில் முன்னர் பிரதமராகபதவி வகித்தபோது அப்போது ஜனாதிபதியாகவிருந்த சந்திரிக்காவினால் பதவிநீக்கப்பட்டார். அதேபோல தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் பதவிநீக்கப்பட்டுள்ளார். இதனையே கெஹலிய ரம்புக்வெல சுட்டிக்காட்டினார்.

இதன்போது அங்கு லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன
உரையாற்றியபோது குறிப்பிடுகையில்,

ஆட்சியமைப்பதற்காக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் தமது தரப்பு ஆதரவுகோராது. ஐக்கிய தேசியக்கட்சிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே இரகசிய உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு பெப்ரவரி 04 ஆம் திகதிக்குள் சமஷ்டித் தீர்வு, போர்க்குற்ற விசாரணை உள்ளிட்ட விடயங்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வடக்கு இல்லாமல்போகும். ஐக்கிய தேசியக் கட்சிக்கு தெற்கு இல்லாமல்போகும். மேற்படி உடன்படிக்கையின் இறுதி பிரதிபலன் இவ்வாறுதான் அமையப்போகின்றது. அதற்கேற்றவாறு எமது அரசியல் வியூகம் அமையும்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியென உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் தேர்தலுக்கு தயாராவோம். பிழையென தீர்ப்பளித்தால் கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சியமைக்க முற்படமாட்டோம். அடுத்த தேர்தலை இலக்கு வைத்து செயற்படுவோம்.” என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com