சற்று முன்
Home / செய்திகள் / ரணில் அரசாங்கம் மீது பட்டதாரிகள் சீற்றம் – தேர்தலில் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை

ரணில் அரசாங்கம் மீது பட்டதாரிகள் சீற்றம் – தேர்தலில் பாடம் புகட்டுவோம் என எச்சரிக்கை

எங்களை முட்டாள்களாக்கவேண்டாம். நாங்கள் வரும் தேர்தலிகளில் எங்கள் பலத்தை உங்களுக்கு உணரவைப்போம் என இலங்கையில் வேலைவாய்ப்பற்றிருக்கும் பட்டதாரிகள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் அவர் தலைமையிலான அரசாங்கத்திற்கும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பில் குறிப்பிட்ட வேலைவாய்ப்புக்களற்றிருக்கும் பட்டதாரிகள்,

20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனம் வழங்குவதாகக் கூறி கடந்த 2018 ஏப்ரலில் பட்டதாரிகளுக்கு மாவட்டச் செயலகத்தில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு நியமனப் பட்டியல் தயாரிக்கப்பட்டது. பின்னர் அதில் வெட்டுக்கொத்துக்கள் இடம்பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் 4 ஆயிரம் பேருக்கு மட்டும் நியமனங்கள் வழங்கப்பட்டன.

பின்னர் பிரதேச செயலகங்களில் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. எனினும் எவருக்கும் இதன் போது நியமனம் வழங்கப்பட்டடிருக்கவில்லை. எனினும் நியமனம் வழங்கப்படும் என அவ்வப்போது பட்டதரிகள் ஏமாற்றப்பட்டு வந்துள்ளனர்.

இந்நிலையில் தற்போது மீண்டும் மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் ஊடாக பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இது எம்மை மிகவும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது. நாடு முழுவதும் சுமார் 50 ஆயிரம் பட்டதாரிகள் உள்ளனர். அவர்களின் பின்னார் பெருமளவான குடும்பங்கள் உள்ளன. இந்நிலையில் பட்டதாரிகளை ரணில் விக்கிரம சிங்க தலைமயிலான அரசாங்கம் தொடர்ந்து ஏமாற்ற முயலுமானால் வரவிருக்கும் தேர்தலிகளில் பட்டதாரிகளின் பலத்தினை ஐக்கிய தேசியக் கட்சிக்கு புரியவைப்போம் என தெரிவித்தனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com