ரணிலுக்கு சிறை !!

அநுராதபுரம் – ரம்பேவ பிரதேச சபையின் முன்னாள் தலைவரான ரணில் மாதவ கமல்நிலமவுக்கு 13 வருட சிறைத்தண்டனையை 5 வருடங்களுக்கு அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டது.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிவான் கிஹான் குலதுங்கவால் நேற்று தீா்ப்பு அளிக்கப்பட்டது. குற்றவாளிக்கு 40 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டது.
ரணில் மாதவ கமல்நிலம 2008 ஆம் ஆண்டில் ரம்பேவ நகரிலுள்ள இளைஞர் ஒருவரை கொரியா நாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுக்கொடுப்பதற்காக ஒரு இலட்சம் ரூபா இலஞ்சமாகப் பெற்றுள்ளார். அவருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களின் சுமத்தப்பட்டுள்ளன.
முதலாவது குற்றத்துக்காக 5 வருட சிறையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது குற்றத்துக்காக 8 வருட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த 13 வருட சிறைத்தண்டனை 5 வருடங்களுக்கு அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com