சற்று முன்
Home / செய்திகள் / ரணிலுக்கு ஆதரவில்லை – ரெலோ போர்க்கொடி

ரணிலுக்கு ஆதரவில்லை – ரெலோ போர்க்கொடி

ஐக்கிய தேசிய முன்னணி அரசிற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவளிப்பதானால் ஐ.தே.முன்னணி 5 நிபந்தனைகளிற்கு இணங்கியே ஆக வேண்டும் என ரெலோ புதிய நிபந்தனைகளை நேற்று விதித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணியின் அரசாங்கம் மீளஸ்தாபிக்கப்படுவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளமைக்கு கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் ஒரு பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் சிறிகாந்தா மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் இதனைத் தெரிவித்துள்ளார். இவ்வாறு ஆதரவு வழங்கப்படும் விடயம் ஒருங்கிணைப்புக் குழுவில் தீர்மானிக்கப்பட்டிருக்கவில்லை. எனவும். 2ம் திகதி கொழும்பில் கூடிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு, மகிந்த ராஜபக்சா யாப்புக்கு விரோதமாக பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது ஆராயப்பட்டதுடன், அவருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரவளிக்க தீர்மானிக்கப்பட்டது. ஆனால் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவளிப்பது குறித்து மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்படவில்லை என பகிரங்கமாக கருத்து வெளிவந்த நிலையில் நேற்றைய தினம் ரெலோவின் மத்தியகுழுக் கூட்டம் வவுனியாவில் அவசரமாக கூடியது.

இக் கூட்டத்தில் ரெலோ கட்சியின் மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் 87 உறுப்பினர்களில் 69பேர் பங்குகொண்டிருந்தனர். இக் கூட்டமானது சுமார் 5 மணித்தியாலமாக இடம்பெற்ற நிலையில் ஐ.தே.முன்னணி ஆட்சியமைக்க இணக்கம் தெரிவித்து ஒப்பமிட்ட ரெலோவின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீதும் கடும் கண்டனம் வெளியிடப்பட்டதோடு நீண்ட தர்க்கமும் இடம்பெற்றது. அதன்போது அடுத்த 5ம் திகதிக்கு முன்னர் கூட்டமைப்பின் கூட்டத்தை கூட்டி ரெலோவின் ஐந்து கோரிக்கை தொடர்பில் பரிசீலித்தே ஆக வேண்டும். என தலைவர் செல்வம் அடைக்கலநாதனிற்கு கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டது.

இதேநேரம் நாட்டில் மீண்டும் மகிந்த யுகம் ஏற்பட அனுமதிக்க முடியாது. இதனால் மகிந்தவிற்கு எதிரான நம்பிக்கைநில்லாப் பிரேரணைகள் வரும்போது அந்தப் பிரேரணைகளிற்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு எந்தவிதமான எதிர்ப்பும் கிடையாது. அதற்கு சம்மதம் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் அந்த இடத்தில் இருந்தே தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை .சேனாதிராயா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோருடன் அவசரமாக தொலைபேசியில் பேசி தனது நிலையை தெரிவித்தார். இந்த நிலையில் எதிர் வரும் 4ம் திகதி கூட்டமைப்பின் ஒருங கிணைப்புக் குழுக் கூட்டத்தினை கூட்டுவதற்கு இணக்கம் தெரிவித்தமையினையடுத்து நிலமையில் இருந்து செல்வம் அடைக்கலநாதன் தப்பிக்கொண்டார் .

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com