ரஜனியை தலைமையேற்கக்கோரி தமிழகமெங்கும் சுவரொட்டிகள்

பல ஆண்டுகளாகவே ரஜினியை அரசியலுக்கு அழைப்பதை அவரது ரசிகர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். வெவ்வேறு காலகட்டங்களின் பல்வேறு சூழல்களில் அந்த அழைப்பு அழுத்தமாகத் தரப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில், சென்னை – மெரினாவில் அமைந்துள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சமாதி நோக்கி அமைதி ஊர்வலம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

இதையொட்டியும், ரஜினியை அரசியலுக்கு வருமாறும் சென்னையில் பல்வேறு இடங்களில் அவரது ரசிகர் மன்றத்தினரால் போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

“1996-க்கு பிறகு 2016

தத்தளிக்குது

தமிழகம்…

தலைமை

ஏற்க வா…”

இதுபோன்ற வாசகங்கள் கொண்ட போஸ்டர்களையும் அதிகம் காணமுடிந்தது. இத்தகைய போஸ்டர்களில் ஒரு சில இங்கே…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com