சற்று முன்
Home / செய்திகள் / யோஷிதவிற்கு கடற்படையில் பதவி உயர்வு!

யோஷிதவிற்கு கடற்படையில் பதவி உயர்வு!

மீண்டும் கடற்படைக்கு நியமிக்கப்பட்ட யோஷித ராஜபக்ஷ, நேற்று (2) முதல் தற்காலிக லெப்டினன்ட் கொமாண்டராக பதவி உயர்வு பெற்றதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட சட்டங்களின்படி பாதுகாப்பு அமைச்சின் ஒப்புதலுடன் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக, கடற்படை செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கொமாண்டர் இசுரு சூரியபந்தர தெரிவித்துள்ளார்.

யோஷித நிரந்தர லெப்டினன்ட் கொமாண்டராக நியமிக்கப்பட தகுதித் தேர்வொன்றை முகம் கொடுக்க வேண்டுமென்றும் தெரிவித்துள்ளார்.

கார்ல்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் (சி.எஸ்.என்) மீது தொடங்கப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து லெப்டினன்ட் யோஷித ராஜபக்ஷ 2016 ல்கடற்படையிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த மாதம், ஜனாதிபதி வழங்கிய விசேட உத்தரவொன்றின் அடிப்படையில், பெப்ரவரி 28, 2016 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் யோஷித கடற்படையில் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டார்.

பணி இடைநிறுத்தப்பட்ட காலத்திற்குரிய சம்பளத்தையும் யோஷித பெறுவது குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com