யா.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் மாபெரும் வீதீயோட்டம்

யா.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வன்மை திறனாய்வுப்போட்டிகளின் தொடக்கமாக மாபெரும் வீதீயோட்டம் 15.1.2018 திங்கள் நடைபெற்றது. ஆண் பெண் இருபாலருக்கும் தனித்தனியாக இவ்வீதீயோட்டம் நடைபெற்றது. ஆண்களிற்கான வீதீயோட்டம் யா.கொக்குவில் இந்துக்கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி யூனியன்கல்லூரியின் மைதானத்தில் நிறைவுற்றது. இதனை கொக்குவில் இந்து அதிபர் திரு.ஞானசம்பந்தனும் யூனியன் கல்லூரி அதிபர் திரு.தி.வரதன் அவர்களும் தொடக்கி வைத்தனர். பெண்களிற்கான வீதீயோட்டம் மல்லாகம் மாகாவித்தியாலயத்தில் ஆரம்பமாகி யூனியன்கல்லூரி மைதானத்தில் நிறைவு பெற்றது.இதனை மல்லாகம் மாகாவித்தியாலய அதிபர்.திருமதி.யோ.தில்லைநாதன் யூனியன் கல்லூரி அதிபர் தி.வரதன் அவர்களும் தொடக்கி வைத்தனர். கல்லூரியின் மைதானத்தில் முதல் பத்து இடங்களினை பெற்ற ஆண் பெண் மாணவர்கள் பரிசில் வழங்கியும் முதல் மூன்று இடங்களினை பெற்ற ஆண் மற்றும் பெண் மாணவிகள் பதக்கம் நினைவுச்சின்னம் வழங்கியும் கௌரவிக்கப்பட்டனர்.

ஆண்கள் முதலாமிடம்:- கு.ஆகாஸ் இரண்டாமிடம்:- க.சிந்துஜன் மூன்றாமிடம்:- நா.பிரதீபன் பெண்கள் முதலாமிடம்:-சி.யதுசா இரண்டாமிடம்:-ஜெ.சோபனா மூன்றாமிடம்:-ச.சங்கவி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com