யாழ் வந்த நடிகர் ஆர்யா ஜும்மா பள்ளிவாசலில் தொழுகையில் ஈடுபட்டார்

தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கும் ஆர்யா ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.

இன்றைய தினம் (23) யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த அவர் யாழ்ப்பாணம் மானிப்பாய் வீதியில் உள்ள பெரிய முஹிதீன் ஜும்மா பள்ளிவாசலுக்கு சென்று ஜும்மா தொழுகையில் ஈடுபட்டார்.

வானொலி ஒன்றின் அனுசரணையில் நடைபெறவுள்ள நிகழ்வு ஒன்றிற்கு இலங்கை வந்துள்ள இவர் தொழுகைக்காக வந்திருந்ததுடன் அங்கிருந்த இளைஞர்கள் நடிகருடன் செல்பி புகைப்படம் எடுக்க முயற்சித்தனர்.

எனினும் நடிகர் அவ்விடத்தில் இருந்து இளைஞர்களை நோக்கி கைஅசைத்து விரைவாக நகர்ந்து சென்றதை காண முடிந்தது.
ஆர்யா ‘அறிந்தும் அறியாமலும்’ படம் மூலம் அறிமுகமானார். நான் கடவுள் மதராச பட்டணம் பாஸ் என்கிற பாஸ்கரன் அவன் இவன் வேட்டை ராஜா ராணி கடம்பன் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

நடிகர் ஆர்யா தற்போது இந்தியாவில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்வொன்றிலும் தற்போது பிரகாசித்து வருகின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com