யாழ். மீனவரின் வலையில் சிக்கிய ஒன்றரைக் கோடி பெறுமதியான மீன்கள்

யாழ்.வடமராட்சி கடற்பரப்பில் கரை வலை தொழில் செய்த மீனவர் ஒருவருக்கு இன்றைய தினம் 20 ஆயிரம் கிலோ மீன்கள் அகப்பட்டு உள்ளன.

வடமராட்சி கிழக்கு ஆழியவளை கடற்பரப்பில் கரைவலை தொழில் செய்யும் மீனவருக்கே அவ்வாறு மீன்கள் அகப்பட்டன.
குறித்த மீன்கள் பாரை இனத்தை சேர்த்தவைகள் எனவும் அவற்றின் இன்றைய சந்தை பெறுமதி சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய்  என தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை இன்றைய தினமே குறித்த மீனவரிடம் இருந்து 30 இலட்சம் ரூபாய்க்கு பெறுமதியான அளவு மீன்கள் கொள்வனவு செய்யப்பட்டு விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com