யாழ் மாவட்டத்தில் நான்கு இலட்சத்து 68 ஆயிரத்து476 பேர் வாக்களிக்கத் தகுதி

பெப்ரவரி 10ஆம் திகதி இடம்பெறயுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் யாழ் மாவட்டத்தில் இம்முறை 243 வட்டாரங்களில் 4,68476 பேர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக யாழ் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் என்.அகிலன் தெரிவித்தார்.

மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கை 453 பேர்கள்,இதில் வேட்பு மனுப்பத்திரத்தில் இருக்க வேண்டிய பெண்களின் எண்ணிக்கை 133 பேர்கள் காணப்படுகின்றனர்.

———————————————————————————————-
யாழ் மாநகர சபைக்கு 27 வட்டாரங்களில் 56,182 வாக்காளர்களும்,

வல்வெட்டித்துறை நகர சபைக்கு 09 வட்டாரங்களில் 6,055 வாக்காளர்களும்,

பருத்தித்துறை நகர சபைக்கு 09 வட்டாரங்களில் 7,864 வாக்காளர்களும்,

சாவகச்சேரி நகர சபைக்கு 11 வட்டாரங்களில் 12,490 வாக்காளர்களும்,

காரைநகர் பிரதேச சபைக்கு 06 வட்டாரங்களில் 8,170 வாக்காளர்களும்,

ஊர்காவற்றுறை பிரதேச சபை 08 வட்டாரங்களில் 7,279 வாக்காளர்களும்;

நெடுந்தீவு பிரதேச சபை 08 வட்டாரங்களில் 3,174 வாக்காளர்களும்,

வேலணை பிரதேச சபை 12 வட்டாரங்களில் 12,763 வாக்காளர்களும்,

வலிகாமம் மேற்கு பிரதேச சபை 15 வட்டாரங்களில் 34,292 வாக்காளர்களும்,

வலிகாமம் வடக்கு பிரதேச சபை 21 வட்டாரங்களில் 60,278 வாக்காளர்களும்,

வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை 17 வட்டாரங்களில் 37,053 வாக்காளர்களும்,

வலிகாமம் தெற்கு பிரதேச சபை 18 வட்டாரங்களில் 37,086 வாக்காளர்களும்,

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை 22 வட்டாரங்களில் 52,517 வாக்காளர்களும்,

வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேச சபை 19 வட்டாரங்களில் 35,047வாக்காளர்களும்,

பருத்தித்துறை பிரதேச சபை 12 வட்டாரங்களில் 29,394 வாக்காளர்களும்,

சாவகச்சேரி பிரதேச சபை 17 வட்டாரங்களில் 41,732வாக்காளர்களும்,

நல்லூர் பிரதேச சபை 12 வட்டாரங்களில் 27,100 வாக்காளர்களும்,
இவ் தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com